தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் நடந்தது.வடக்கு மாவட்ட செயலாளர்,முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமை தாங்கினார்.அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்புச் செயலாளர் செம்மலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு நகர,பேரூராட்சி,ஒன்றிய செயலாளர்களிடம் தனித்தனியாக தங்களது பகுதிகளில் செய்த பணிகள் குறித்து கேட்டறிந்தனர். கூட்டத்தில்,முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம்,முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன்,சின்னப்பன் மாவட்ட அவைத் தலைவர் பெருமாள்,நகரச் […]
வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் […]
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாத். இவர் கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரேசி பாய்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழில், கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்திலும், சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் யூ’ படத்திலும் நடிக்கிறார். இதில், மிஸ் யூ திரைப்படம் நவம்பர் 29-ம் தேதி […]
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘அமரன்’. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்தனர். ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் தீபாவளி அன்று உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தன. இதனால், இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், […]
நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 14-ந் தேதி ‘கங்குவா’ படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் […]
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக மத்திய சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏலத்தை வேதாந்தா நிறுவனம் எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டால் ஏற்க மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கரட்டுகாட்டைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவரிடம், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக மதுரை சொக்கிக்குளத்தை சேர்ந்த முத்துகுமார் என்பவர் ஆசை காட்டினார். இதை உண்மை என நம்பி மதுரைக்கு .காரில் 3 லட்சத்துடன் சிவசுப்பிரமணி வந்துள்ளார். அவரை மாநகராட்சி நீச்சல்குளம் பகுதிக்கு அழைத்துச்சென்ற முத்துக்குமார் காரில் இருந்தவாறு பண விபரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த இடத்திற்கு வந்த 2 பேர், தங்களை போலீஸ் என அறிமுகப் படுத்திக்கொண்டு காரில் சோதனை செய்தனர். இதனால் […]
மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல், பகுப்பாய்வு (abstract reasoning), மொழி (Language), உண்முக ஆய்வு , பிரச்சனைகளைத் தீர்த்தல் (Problem Solving), உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. மனிதர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புகள் அடங்கும். மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், […]