• April 27, 2024

Month: January 2024

கோவில்பட்டி

நாகம்பட்டி கல்லூரியில் செவ்வியல் இலக்கிய உரை வளங்கள் பன்னாட்டு கருத்தரங்கம்

நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ் துறை சார்பில்  செவ்வியல் இலக்கிய உரை வளங்கள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு  உரையாற்றினார். மேலும் தமிழ் துறையில் பயிலும் 91- மாணவ – மாணவிகளுக்கு தனது சொந்த செலவில்  புத்தகங்கள்  வழங்கினார். கல்லூரி  பதிவாளர் சாக்ரட்டீஸ், இயக்குனர் வெளியப்பன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் ஓட்டப்பிடாரம்  கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர், காசி விஸ்வநாதன்,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட […]

செய்திகள்

முழுமையான ஊதியம், பணியிடம் மாறுதல் வேண்டி மக்கள் நலப்பணியாளர்கள் போராட்டம்

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே மக்கள் நலப்பணியாளர்கள் இன்று காலை முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர், மக்கள் நலப்பணியாளர்கள் சங்க மாநில தலைவர் நல்.செல்லப்பாண்டியன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் இதில் பங்கேற்றனர், கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. *1.7.2022 முதல் வாய்மொழி உத்தரவாக பனி நியமனம் செய்யப்பட்டுள்ள மக்கள் நல பணியாளர்களுக்கு 2006-2011 கலைஞர் அரசின் 6 வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 1.6.2009 முதல்  வழங்கப்பட்ட காலமுறை ஊதியத்துடன் […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே கிராமத்தில் தங்கி ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில்  “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அறிவித்தார். இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ […]

பொது தகவல்கள்

குழந்தை எவ்வளவு நேரம் தூங்கலாம் ?

*பிறந்த குழந்தைகள் மூன்று மாதங்கள் வரை நாளொன்றுக்கு 14 லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.  *ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது. *குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை)  தினசரி 12 லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும்.  ➡ குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது. *தளிர்நடை பயிலும் குழந்தைகள் (1 லிருந்து 2 வயது வரை) […]

பொது தகவல்கள்

தை அமாவாசையில் முன்னோருக்கு தர்ப்பணம்

 நம்முடைய முன்னோருக்கு தர்ப்பணம் அளிக்க தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆகிய தினங்கள் சிறந்தது. தை அமாவாசையில் எப்போது தர்ப்பணம் அளிக்க வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம். அமாவாசைகளில் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் முக்கியமானவையாகும். வருடம் முழுவதும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து, பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசைகளில் விரதம் இருந்து பித்ருக்களை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு விருது;  ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார். மாநாட்டின் போது  கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு  சிறந்த பள்ளி மேலாண்மை குழுவிற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை  ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:- மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்திட காலை உணவு திட்டம் மதிய உணவு திட்டத்தை […]

செய்திகள்

விஜயகாந்துக்கு கனிமொழி மரியாதை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்று கனிமொழி எம்.பி., தனது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் இன்று காலை சென்றார். அங்கு விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜய்காந்த் மனைவியும் தேமுதிக பொதுசெயலாளருமான பிரேமலதா, அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். அஞ்சலி செலுத்தி முடித்தவுடன் பிரேமலதாவுடன் கனிமொழி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

தூத்துக்குடி

நடுரோட்டில் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவர்

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அல்லிக்குளம் கிராமத்தில் வசிப்பவர் பொன்தங்கம் என்ற குணா (வயது 35). இவரது மனைவி அமராவதி (28). இவர் மகளிர்குழு தலைவியாக உள்ளார். இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே  அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்தது,. இந்த நிலையில் இன்று காலை  அமராவதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுய உதவிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் பகல் 12 மணி அளவில் தனது […]

செய்திகள்

தூத்துக்குடி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தினமும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி  திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் திமுக உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறர்கள். அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள், தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்களான அமைச்சர்கள்  அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர். ‘ இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்றனர். […]

தூத்துக்குடி

முடி திருத்தும் தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் புளியநகர் சந்திப்பில் முருகன் என்பவரின் முடி திருத்தும் கடையில் முடி வெட்டிவிட்டு, முடி வெட்டியதற்கு பணம்  கொடுக்காமல் சென்ற பொன் சேகர் என்பவரிடம் பணம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. முடி திருத்தும் தொழிலாளி  முருகனிடம் பணத்தை கொடுக்காமல் கெட்ட வார்த்தை பேசிய போன்செகர் ,அருகில் கிடந்த மர பட்டியலால் முருகனின் தலையின் பின்பகுதியில் ஓங்கி  அடித்தார். இதில் முருகனை சம்பவ இடத்டிலேயே இறந்து போனார். இந்த சம்ப்வம் 24.3.2017 அன்று நடந்தது. இந்த […]