• April 27, 2024

Month: September 2022

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து; ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார், அவரது சகோதரர் மகேஷ்குமார் ஆகியோர் இடையே பிரச்சினை இருந்து வந்தது.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.இந்தப் புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் […]

சினிமா

`நானே வருவேன்’ எப்படி இருக்கு? கோவில்பட்டி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்….

வி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்துள்ள படம்` நானே வருவேன்’.தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.இரட்டையர்களில் ஒருவர் கதிர், இன்னொருவர் பிரபு.. இவர்களில் கதிர் மூர்க்கத்தனமான குணம் கொண்டவர். இதனால் சிறுவயதில் தந்தையையே கொலை செய்து விடுகிறான் கதிர்.இதனால் கதிரை விட்டுவிட்டு பிரபுவை மட்டும் தாயார் அழைத்து சென்று விடுகிறார். 2௦ வருடங்கள் கழித்து பிரபு தன் மனைவி, மகன் என குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளார்.இந்த நிலையில் பிரபுவின் மகள் […]

செய்திகள்

சாலையில் நின்ற காரின் கதவை திறந்ததால் பின்னால் பைக்கில் வந்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், சாலை விபத்துகளால் சுமார் 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர் மற்றும் 4.5 லட்சம் பேர் காயமடைகின்றனர் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சாலை விபத்துகளைத் தவிர்க்க, போக்குவரத்து துறை பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் கலா கிருஷ்ணசாமி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.அதில் காணப்படும் காட்சி மனதை பதைபதைக்க செய்யும் விதத்தில் உள்ளது. அந்த […]

செய்திகள்

கடலூர் சிறையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்

சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கிரிமினல் அவமதிப்பு வழக்கும் மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது.இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் அவமதிப்பு […]

சினிமா

`பொன்னியின் செல்வன்’ திரைப்படம் எப்படி இருக்கு? கோவில்பட்டி ரசிகர்கள் என்ன சொல்றாங்கனு பாருங்க….

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம்.இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு சட்டையில் அணியும் நவீன கேமரா

தூத்துக்குடி மாவட்ட போலீசாரின் பயன்பாட்டுக்கென தமிழக அரசு ரூ.1,34,000/- மதிப்புள்ள 6 சட்டையில் அணியும் புதிய நவீன ரக கேமராக்கள் மற்றும் சேமிப்பு கருவியை வழங்கியுள்ளது. இந்த கேமராக்களை போக்குவரத்து போலீசார் , தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு அவர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோ, ஆடியோ, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யவும், பதிவு செய்தவற்றை சேமிக்கவும் வசதி உள்ளது. இதை போலீசார் வாகன சோதனை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வேடமணிந்த தசரா பக்தர்கள், பொதுமக்களிடம் காணிக்கை வசூல்

தூத்துக்குடிமாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்காரம் வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வேடமணிந்து ஊர்ஊராக சென்று உண்டியல் வசூல் செய்து கோவிலில் காணிக்கை செலுத்துவா்.இந்த வகையில் ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள், கூலி தொழிலாளிகள் என 50 பேர் அடங்கிய தசரா குழுவினர் குறவன்- குறத்தி, அம்மன், காளி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து […]

கோவில்பட்டி

கடம்பூர் பேரூராட்சியில் 9 வார்டுகளுக்கு தேர்தல்; 65 சதவீதம் வாக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதன்படி கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 1, 2, 11 ஆகிய வார்டுகளில் இறுதி வேட்பாளர் பட்டியலில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து பேரூராட்சி தேர்தலை பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.இதனை எதிர்த்து 1, 2, 11-வது வார்டு சுயேச்சை வேட்பாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். […]

தூத்துக்குடி

குலசை தசரா: மைசூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.இந்த ரெயில் 3௦-ந்தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.௦5 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக மறுநாள் 1-ந்தேதி காலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறது இதேபோல் 1-ந்தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு வழியாக […]

தூத்துக்குடி

பெங்களூருவில் குட்கா மொத்த வியாபாரியை மடக்கி கைது செய்த தூத்துக்குடி போலீஸ்-பரபரப்பு தகவல்

தென்மாவட்டங்களில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு ஒழிப்பதற்கு மதுரை தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு பலர் கைது செய்யப்பட்டு பெருமளவில் குட்கா மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்குளில் சம்மந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.*இதனையடுத்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை தென்மாவட்டங்களுக்கு மூளையாக செயல்பட்டு மொத்த விற்பனை மற்றும் கடத்தலுக்கு மூல காரணமாக செயல்படுபவர்கள் யாரென […]