• May 8, 2024

சாலையில் நின்ற காரின் கதவை திறந்ததால் பின்னால் பைக்கில் வந்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்

 சாலையில் நின்ற காரின் கதவை திறந்ததால் பின்னால் பைக்கில் வந்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், சாலை விபத்துகளால் சுமார் 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர் மற்றும் 4.5 லட்சம் பேர் காயமடைகின்றனர் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சாலை விபத்துகளைத் தவிர்க்க, போக்குவரத்து துறை பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் கலா கிருஷ்ணசாமி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் காணப்படும் காட்சி மனதை பதைபதைக்க செய்யும் விதத்தில் உள்ளது. அந்த வீடியோவில், சாலையில் ஒரு மோட்டர் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது, சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் கதவு அதனுள் இருந்த டிரைவரால் திடீரென திறக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கார் கதவில் மோதினார். அதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள், எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஒரு லாரி சக்கரத்தின் மீது மோதியதை காணலாம்.
இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து, “உங்கள் வாகனத்தின் கதவுகளைத் திறக்கும்போது கவனமாக இருங்கள் மற்றும் அபாயகரமான விபத்துகளைத் தவிர்க்கவும்” என்று குறிப்பிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
பொதுவாக சாலையில் வாகனத்தில் செல்லும் போது, சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் போன்ற நான்கு சக்கர வாகனங்களின் அருகில் அவற்றை ஒட்டியவாறு செல்வதை தவிர்த்தால் இது போன்ற விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *