`நானே வருவேன்’ எப்படி இருக்கு? கோவில்பட்டி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்….
![`நானே வருவேன்’ எப்படி இருக்கு? கோவில்பட்டி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்….](https://tn96news.com/wp-content/uploads/2022/09/download-7-3.jpg)
வி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்துள்ள படம்` நானே வருவேன்’.
தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.
இரட்டையர்களில் ஒருவர் கதிர், இன்னொருவர் பிரபு.. இவர்களில் கதிர் மூர்க்கத்தனமான குணம் கொண்டவர். இதனால் சிறுவயதில் தந்தையையே கொலை செய்து விடுகிறான் கதிர்.
இதனால் கதிரை விட்டுவிட்டு பிரபுவை மட்டும் தாயார் அழைத்து சென்று விடுகிறார். 2௦ வருடங்கள் கழித்து பிரபு தன் மனைவி, மகன் என குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளார்.
இந்த நிலையில் பிரபுவின் மகள் உடலில் ஒரு பேய் புகுந்து கொள்கிறது. அது வெளியேற வேண்டுமென்றால் ஒரு கொலையை செய்ய சொல்கிறது. யாரை, எதற்காக கொல்ல சொல்கிறது என்பது தான் படத்தின் கதை.
தனுஷ் ஜோடியாக இந்துஜா, எல்லி அவ்ராம் ஆகியோர் இருக்கிறார்கள். மனநல மருத்துவராக பிரபு, தனுசின் நண்பனாக யோகி பாபு நடித்து இருக்கிறார்கள்.
நானே வருவேன் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. கோவில்பட்டி சத்யபாமா தியேட்டரில் வெளியாகியது. இதன் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வந்த ரசிகர்களிடம் படம் எப்படி இருக்கு என்று கோவில்பட்டி டாக்கீஸ் சுரேஷ் கருத்து கேட்டார். அந்த காணொளியை இங்கு காணலாம்….
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)