Month: January 2025

செய்திகள்

இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளை; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது, ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தை திமுக அரசு பாலைவனமாக மாற்றி வருகிறது. மேலும்,ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தொடர்பான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நேரத்தில்,13 மணல் குவாரிகளை திறப்பதற்கு திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுத்து வருகிறது..இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் […]

சினிமா

மீண்டும் சுந்தர்.சி படத்தில் விஷால் நடிக்கிறார்

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் ‘மதகஜராஜா’. கடந்த 2013-ம் ஆண்டு உருவான இப்படம் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 12-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் மற்றும் […]

சினிமா

பராசக்தி திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது; நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பு

நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் ஆர்/. கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி வசனத்தில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, 1952 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி..  ‘ இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா திரு.பெருமாள் முதலியார் அவர்கள்தான் தயாரித்தார்.  ஏ.வி.எம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.    அந்தத் திரைப்படத்தில் சிவாஜி  கதாநாயகனாக நடிக்க வைப்பதை ஏவிஎம் நிறுவனத்தின் ஏவி.மெய்யப்ப செட்டியார் ஆட்சேபனை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆஸ்கார் கல்லூரியின் சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு, சாலை விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.  பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் .கிரிஜா  கொடியசைத்து தொடக்கி வைத்தார். மோட்டார் வாகன அலுவலர் கவின்ராஜ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கிடையே போக்குவரத்து விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 15 நபர்களுக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இலவசமாக தலைக்கவசம் வழங்கினார். இப்பேரணி பயணியர் விடுதியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம், […]

சினிமா

‘பராசக்தி’ பட தலைப்பு விவகாரத்தில் புதிய சர்ச்சை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிட்டுள்ளதை படக்குழு டைட்டில் டீசர் வெளியிட்டு அறிவித்தது. இந்த தலைப்புக்கு சிவாஜி கணேசன் நடித்துள்ள பராசக்தி படத்தின் பெயரை வைக்க […]

சினிமா

ஆளும் கட்சியை விமர்சிக்கும் விஜய் ; நடிகர் பார்த்திபன் சொல்வது என்ன?

சினிமா நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் புதுச்சேரி வந்தார். அவர் பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமிநாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் சுமார் 15 நிமிடம் தனியாக பேசினார்கள். அதன்பின் பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:- புதிதாக அரசியலுக்கு வருபவர்களை ஊக்குவிக்கவேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் தப்பு கிடையாது.விஜய் அவரது வேகத்தில் செல்லட்டும். அரசியலில் பெரிய இடத்துக்கு செல்ல தடை இல்லாமல் இருக்காது. ஆட்சியை பிடிப்பது என்பது எவ்வளவு […]

சினிமா

மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகிறது

தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த 24-ந் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் […]

ஆன்மிகம்

நந்தி வாகனத்தில் அருள் பாலிக்கும்  தஞ்சை கோடி அம்மன்

தஞ்சை கோடி அம்மன் கோவில் தற்போது இருக்கும் பகுதி தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. அங்கிருந்தபடியே அவர்கள் இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களுக்கு இணையாக இறைவனை வழிபட்ட தஞ்சன் என்ற அசுரன் தேவர்களுக்கும் அதிகமான தகுதியைப் பெற்றான். தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். எனவே இறைவன் தஞ்சபுரீஸ்வரர் எனப்பட்டார். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க […]