சம்ஸ்கிருதத்தில் இதை ‘சப்தபதி’ என்று கூறுவார்கள். அதாவது 7 அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு 7 அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை, பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்க்கண்டவாறு தனது பிரார்த்தனையை சொல்கிறான்! ” *முதல் அடியில்:* பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்” *”இரண்டாம் அடியில்:* ஆரொக்கியமாக வாழ வேண்டும்” *”மூன்றாம் அடியில்:* நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்” *”நான்காவது அடியில்:*சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்” *”ஐந்தாவது அடியில் :* லட்சுமி […]
ஆதிதிராவிடர் மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் உரிமை தொகைக்கு பயன்படுத்த தி.மு.க.
சென்னையில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த எம் ஜி ஆர் மன்றம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 7 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு எடுத்திருப்பதாகவும், அந்த நிதியை கொண்டு மகளிர் உரிமைத் தொகை […]
கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் சார்பில் 69வது மாதாந்திர கூட்டம் என்.கே. மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய நல்லாசிரியை விருதாளர் விநாயக சுந்தரி தலைமை தங்கினார். காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை உலகம்மாள் முன்னிலை வகித்தார். மகிழ்வோர் மன்ற காப்பாளர் செல்வின் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் நடைபெற்ற அரசு ஊழியருக்கான சதுரங்க போட்டியில் 2ம் இடம் பெற்ற கோவில்பட்டி இலக்குமி ஆலை தொடக்கப்பள்ளி ஆசிரியை மணிமொழி நங்கைக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.வாசிப்பதை நேசிப்பவருக்கான […]
தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் 8 மணி நேரத்தில்திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடையும். பின்னர் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 ரெயில் நிலையங்களில் […]
கோவில்பட்டி அருகே கிளவிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கே.துரைச்சாமிபுரத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.09 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையலறை கட்டிடத் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு உதவி கலெக்டர் கவுரவ் குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சமையலறை கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பாண்டவர்மங்கலம் ஊராட்சி கீழ பாண்டவர்மங்கலம் கிராமத்தில் ரூ.12.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதியரேஷன்கடை கட்டிடத்தை திறந்து […]
பொதுவாகவே அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றாலும், எம்பெருமான் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. சிவன் ஒரு அபிஷேகப் பிரியர் என்றும் கூறுவர். காரணம் முக்கண் முதல்வனாகும் சிவனின் நெற்றிக்கண், தீப்பிழம்பாக உஷ்ணத்தை அளிக்கும். அந்தச் சூட்டைத் தணித்து அவருக்கு குளிர்ச்சி ஊட்டவே சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு மேலாக ஒரு செம்பு பாத்திரத்தைக் கட்டி, அதனுள் குளிர்ச்சியான நீர், பன்னீர், நெய், இளநீர் போன்றவற்றை நிரப்பி, அதன் அடியில் சிறு துளைகளிட்டு அதன் வழியே சொட்டு சொட்டாக […]
குளக்கரைகளிலும், மரத்தடியிலும்_விநாயகரை அதிகம் காணலாம். இதனால் அவர் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றார். இப்படிப்பட்ட சில பிள்ளையாரையும் அவரை எப்படி தரிசித்தால் சிறந்த பலன்கள் பெறலாம் என்பதையும் இங்கே காண்போம்… வன்னிமரபிள்ளையார் இவர் வலஞ்சுழியாக இருப்பது விசேஷம். அதிலும், வடக்கு திசை நோக்கி அருள் பாலித்தால் இன்னும் விசேஷம். அவிட்டம் நட்சத்திரம் அன்று இவரை நெல் பொரியால் அர்ச்சித்து, அபிஷேகம் செய்து வழிபடுவதோடு, கன்னிப் பெண்களுக்கு தானம் கொடுத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல […]
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளில் அவரை நினைவு கூறும் வகையில் சுற்றுசூழலின் நலன் கருதி எனது மண் எனது நாடு என்னும் தலைப்பில்மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்,. கோவில்பட்டி அய்யனேரி கிராம சுற்று வட்டாரம் மற்றும் பள்ளிகளில் 100 மரக்கன்றுகளை நட்டனர். இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய சமூக, சமுதாய செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று மாலை பிரதோஷம் சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மணிப்பூர் மக்கள் அமைதி வேண்டி, கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இன பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் மற்றும் பொதுமக்களுக்கு அமைதி வேண்டியும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டியும் அகில இந்திய கத்தோலிக்க பெண்கள் பணிக்குழு சார்பில் கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பவனி நடைபெற்றது.பாளையங்கோட்டை மறை மாவட்ட மேதகு ஆயர் அந்தோணிசாமி, சவரிமுத்து வழிகாட்டுதலின்படி, கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார் மற்றும் உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ். ஆகியோர் […]