மணிப்பூர் மக்கள் அமைதி வேண்டி, கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இன பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் மற்றும் பொதுமக்களுக்கு அமைதி வேண்டியும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டியும் அகில இந்திய கத்தோலிக்க பெண்கள் பணிக்குழு சார்பில் கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பவனி நடைபெற்றது.
பாளையங்கோட்டை மறை மாவட்ட மேதகு ஆயர் அந்தோணிசாமி, சவரிமுத்து வழிகாட்டுதலின்படி, கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார் மற்றும் உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ். ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள்.தொடர்ந்து பெண்கள் பணிக்குழு சார்பில் பவனி நடைபெற்றது.
பெண்கள் பணிக்குழு செயலாளர் அமலி அமலதாஸ் ஏற்பாட்டின் பேரில் பெண்கள் பணிக்குழு உறுப்பினர்கள் சிந்தாகனி, தெரசம்மாள் ராஜேஸ்வரி, புஷ்பா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.