என்ஜின் பழுது : கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் அந்த்யோதயா விரைவு ரெயில் 40 நிமிடங்கள் நிறுத்தம்

 என்ஜின் பழுது : கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் அந்த்யோதயா விரைவு ரெயில் 40 நிமிடங்கள் நிறுத்தம்

நாகர்கோவில் – சென்னை தாம்பரம் இடையே அந்த்யோதயா விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு அந்த்யோதயா விரைவு ரெயில் புறப்பட்டு வந்தது.
கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தபோது திடீரென என்ஜின் பழுது காரணமாக அந்த்யோதயா விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது.


உடனடியாக ரெயில்வே மீட்பு குழுவினர் மற்றும் பராமரிப்பு குழுவினர் விரைந்து வந்தனர்.
ஒரு சில நிமிடங்களில் புறப்படவேண்டிய ரெயில் அதிக நேரம் நின்றதால் பயணிகள் என்னமோ ஏதோ வென்று இறங்கி பார்த்தனர்.
அப்போது தான் ரெயில் என்ஜின் பழுது ஆனதும், சரிபார்ப்பு பணி நடப்பதும் தெரிய வந்தது.
சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு என்ஜின் பழுது நீக்கப்பட்டு ரெயில் புறப்பட்டு சென்றது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *