• April 27, 2024

Month: November 2023

செய்திகள்

சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில், தேங்கிய மழைநீருடன் கழிவுநீரும் கலந்திருக்கக்கூடிய நிலை ;

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் விடியா தி.மு.க அரசு எடுக்கவில்லை என்றும்,மழை நீர் எங்கும் தேங்கவில்லை என அமைச்சர்கள் பொய்  சொல்லிவருகிறார்கள் என்றும்,ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேரிடர் காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு ஓடிவந்து உதவும் ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க மட்டும்தான் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். அ. து. மு. க. அமைப்புச் செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், பென்சில் தொழிற்சாலை பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை […]

கோவில்பட்டி

5 ஊராட்சிகளில் `மக்கள் களம்’ நிகழ்ச்சி

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில்  வர்த்தகரெட்டிபட்டி , திம்மாராஜபுரம், கூட்டுடன்காடு, குமாரகிரி, அல்லிகுளம் ஆகிய 5 ஊராட்சிகளில் `மக்கள் களம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி , ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கோவில்பட்டி

கன மழைக்கு  எட்டயபுரம் தெப்பக்குளம் நிரம்பியது

எட்டயபுரம் சமஸ்தானம் ராஜா மகாராஜா காலத்தில் 2௦0 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறங்களிலும் படிக்கட்டுகளுடன்  கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம் கட்டப்பட்டது. இந்த தெப்பக்குளம் மன்னர்கள் காலத்தில் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்ந்தது. தற்போது சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த தெப்பகுளம் முழுவதும் தண்ணீர் நிரம்பிவிட்டது.தெப்பக்குளத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் இன்று  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தெப்பக்குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவதற்கும், நீர் செல்லும் பாதையினை சுத்தப்படுத்துவதற்கும் துறை […]

செய்திகள்

விஜயகாந்துக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை ; மருத்துவமனை 2-வது அறிக்கை

உடல்நிலை பாதிப்பு காரணமாக தே. மு. க. தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11 நாட்களாக சீகிச்சையில் இருக்கும் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை. நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதால் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று பகலில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று மாலை 2-வது மருத்துவ அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். விஜயகாந்துக்கு உள்ள […]

செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டுவிட்டார். தே.மு.தி.க. கட்சிக் கூட்டங்களில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த், சென்னை மியாட்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு […]

தூத்துக்குடி

கடன் தகராறில் அனல் மின்நிலைய ஊழியரை கடத்தி தாக்குதல்; 2 பேர் மீது

தூத்துக்குடி அனல் மின்நகரை சேர்ந்தவர் லிங்கதுரை (வயது 59). அனல் மின் நிலைய ஊழியரான இவர்‌ தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முத்தையாபுரத்தை சேர்ந்த சக்திவேல் (வயது43) என்பவர் மூலம் பிரதீப் (30) என்பவரிடம் ரூ. 2,10,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தொகைக்கு  ரூ. 1லட்சத்து 47 ஆயிரம் வரை வட்டி செலுத்தி உள்ளாராம். இந்நிலையில் கேம்ப்-2 பகுதி பஸ் நிறுத்தத்தில் லிங்கதுரை நின்று கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த பிரதீப், சக்திவேல் […]

பொது தகவல்கள்

விளாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்து- நன்மைகள்

விளாம்பழம் என்பது இந்தியாவில் பயிரிடப்படும் ஒரு புனிதமான பழமாகும். இது முக்கியமாக இலங்கை, தாய்லாந்து மற்றும் தெற்காசியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இது ஒரு விசித்திரமான புளிப்பு சுவை கொண்டது. எனவே, இது ஜாம் மற்றும் சட்னிகள்  தயாரிப்பதற்கு ஏற்ற ஒரு பொருளாகும்.  இது தயிர் பழம், யானை ஆப்பிள் மற்றும் ‘குரங்கு பழம்” என்றும் அழைக்கப்படுகிறது. Limonia Acidissima என்பது மர ஆப்பிள்களின் அறிவியல் பெயர். ஊட்டச்சத்துகள்ஆற்றல் – 134 கலோரிகள்புரதம் – 7 கிராம்கொழுப்பு […]

தூத்துக்குடி

மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு தூத்துக்குடியில் நாளை நடக்கிறது; கனிமொழி எம்.பி.

தமிழ்நாட்டை 2030 ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் வலிவு கொண்ட பொருளாதாரமாக மாற்றுவது என்ற முதல் -அமைச்சரின் லட்சிய கனவுகளை நோக்கிய பயணத்தின் ஒருபடியாக சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு நாளை 30-ந்தேதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில்    மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில் மையம் பொது […]

கோவில்பட்டி

மூத்தோர் தடகளம்: தற்காப்பு கலை ஆசிரியர் 2 பரிசு வென்றார்

தூத்துக்குடி மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கோவில்பட்டியை சேர்ந்த தற்காப்பு கலை ஆசிரியர்  ஆர்.காசி மாரியப்பன் பங்கேற்று ௨ பரிசுகளை பெற்றார். ஆண்கள் 45 வயது பிரிவில் குண்டு எறிதல் போட்டி, மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் இரண்டாமிடம் பிடித்து பரிசு பெற்றார். இதை தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதியை சந்தித்து பரிசு சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். பின்னர் கவுன்சிலர் ஜோதிபாசுவை சந்தித்து […]

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி ; டி. ஜெயக்குமார் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  நினைவு நாளையொட்டி டிசம்பர் 5ஆம் தேதி அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த போலீசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலலிதா  நினைவு நாள் அன்று உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அனுமதி கடிதம் வழங்கினார்கள்  அப்போது மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆர் எஸ் ராஜேஷ், கேபி கந்தன், வழக்கறிஞர் […]