நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி ; டி. ஜெயக்குமார் பேட்டி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி டிசம்பர் 5ஆம் தேதி அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த போலீசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அன்று உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அனுமதி கடிதம் வழங்கினார்கள்
அப்போது மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆர் எஸ் ராஜேஷ், கேபி கந்தன், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாலமுருகன், செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர், இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஆட்சி அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வரக்கூடாது என்ற வகையில் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அனைத்து கட்சி தலைவர்களும் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ஒரே விமானத்தில் சந்தித்து புறப்பட்டு சந்தித்தோம் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாக இருப்பது ஒரு மணி நேரம் நேரில் சந்தித்து பேசினார்.
புரட்சித்தலைவி அம்மாவின் முன் முயற்சியினால் தான் ஒன்பதாவது அட்டவணையில் 69% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது தி.க. தலைவர் வீரமணி கூட சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டமும் கொடுத்தார்
சமூக நீதி என வாயிலே காட்டாமல் செயலிலே காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா சமூக நீதி குறித்து பேசும் ஸ்டாலின் வேங்கை வயல் 90 நாட்கள் ஆகிறது வேங்கை வயல் துர்நாற்றம் இன்னும் போகவில்லை. 150 நாட்களாகியும் துர்நாற்றம் போகவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தத்தளித்து கொண்டுள்ளது
பொன்முடி போன்றோர் நீங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களா. என்று பேசியதையெல்லாம் கூட பார்த்திருப்பீர்கள் சமூகத்திற்கு கேடு விளைகின்ற சமூக நீதியை குழி தோண்டி புதைக்கிற கட்சி திமுக
ஆட்சிக்கு வந்த உடனே உலகம் முழுக்க இருக்கக்கூடிய பொருளாதார வல்லுநர்களை அழைத்து வந்து எல்லோருக்கும் எல்லாம் செய்து விடுவோம் என வாய் கிழிய பேசினார்கள் அந்த குழு என்ன அறிக்கை கொடுத்தது இதுவரை எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை பொருளாதார வல்லுநர் குழுவை அமைத்து சொத்து வரி மின்சார வரை பால் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது
ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலம் ஓடும் என்று கூறிவிட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய செயலில்தான் அரசு இருக்கிறது தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை
.கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை வைக்கும் போது 75% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை அவர் அப்பாவின் புகழ் பாடுவதற்கு மக்கள் வரிப்பணம் செலவிடபடுகிறது. உலகத்திலேயே எந்த ஆட்சியும் இதுபோன்று செயல்படவில்லை. வலிமை உள்ளவர்கள் எல்லாம் சட்டமாகாது என்ற புரட்சித்தலைவரின் பாடல் படி நீங்கள் வைத்ததெல்லாம் சட்டமாகாது 2024 இல் தகுந்த பதிலடி கொடுத்து அதிமுகவிற்கு 40 தொகுதிகளையும் கொடுப்பதன் மூலம் திமுக நாடாளுமன்றத் தேர்தலோடு கதை முடிந்தது என்ற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும்.
அதிமுக வலுவாக உள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். கட்சி எழுச்சியாக உள்ளது .திமுகவிற்கு எதிர்ப்பலை உள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எங்களை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள்.
தலைவரின் ஆட்சி மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அமையும். பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை தற்போது கட்சி வலுப்படுத்தக்கூடிய அச்சாரம் போடப்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்ற பிரச்சினைகளை மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறோம். இது வாக்குகளாக கண்டிப்பாக மாறும்
தேர்தலுக்கு இன்னும் மூன்று நான்கு மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்
திமுக கூட்டணியில் பிரிக்க முடியாத கூட்டணியாக யாரும் இல்லை. மாறுபட்ட கொள்கை உடையவர்கள் தான் அங்கே உள்ளனர். திமுகவுடன் சென்றால் நிலைமை மோசமாக விடும் என்ற நிலை ஏற்படும். தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு வருவதற்கு கண்டிப்பாக வாய்ப்புகள் உள்ளது. டைட்டன்சி சிபிஐ சிபிஎம் கட்சிகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் இன்று காங்கிரசோடு இருக்கிறார்கள் நிறைய கட்சிகள் முரண்பாடு உள்ள கட்சிகள் தான் தேர்தல் நெருங்கும்போது பல கட்சிகள் அங்கிருந்து வெளியேறி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும்.
அமலாக்கத்துறை லஞ்ச ஒழிப்புத்துறை எந்த துறை வந்தாலும் அஞ்சாத இயக்கம் அதிமுக 60,000 கோடி கொள்ளை அடித்துள்ள துரைமுருகன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீது அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.க்கு திமுக தான் பயப்பட வேண்டும்
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.