மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு தூத்துக்குடியில் நாளை நடக்கிறது; கனிமொழி எம்.பி. சிறப்புரை ஆற்றுகிறார்
தமிழ்நாட்டை 2030 ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் வலிவு கொண்ட பொருளாதாரமாக மாற்றுவது என்ற முதல் -அமைச்சரின் லட்சிய கனவுகளை நோக்கிய பயணத்தின் ஒருபடியாக சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இதனையொட்டி மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு நாளை 30-ந்தேதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அ.ஸ்வர்ணலதா வரவேற்று பேசுகிறார்.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். கனிமொழி எம்.பி. புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறி சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், சட்டமன்ற உ றுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்க்கண்டேயன், ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் , கடம்பூர் செ .ராஜு, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி , துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், இந்திய வியாபார தொழில் சங்க தலைவர் கோடீஸ்வரன், அகில இந்திய வர்த்தக தொழில் சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு, அகில இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் வெயிலா.கி.ராஜா , நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மா.பரமசிவம், தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விஜய் ஆனந்த் , முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.
தொழில் முனைவோருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர் அகிலா, சிட்கோ திட்டங்கள் பற்றி சிப்காட் திருநெல்வேலி கிளை மேலாளர் செ.சத்யராஜ், தூத்துக்குடி சிப்காட் திட்ட அலுவலர் ஜோண் மேரி , செல்வராணி , தொழில் முதலீட்டு திட்டங்கள் பற்றி தொழில் முதலீ ட்டு கழக தூத்துக்குடி கிளை மேலாளர் அ.கஸ்தூரி ஆகியோர் விளக்கி பேசுகிறார்கள்.
விழா முடிவில் மாவட்ட தொழில் மையம் (தொழில்கள் ) உதவி பொறியாளர் ரா.ராஜேஷ் நன்றி கூறுகிறார்