கோவில்பட்டியில் சீனியர் ஆக்கிபோட்டி; தென்காசி அணியை திணறடித்த தூத்துக்குடி

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் கே.ராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி இன்று (ஜூன் 4) தொடங்கி 8 -ந்தேதி வரை நடக்கிறது.
கோவில்பட்டி கே ஆர் கலைக் கல்லூரி ஆக்கி மைதானத்தில இன்று காலை நடந்த தொடக்க விழாவுக்கு கே ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.முதல் போட்டியை கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர்கள் தொடக்கி வைத்தனர்

முதல் போட்டியில் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தூத்துக்குடி அணியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தென்காசி அணியினர் திணறினார்கள்.அவர்களால் ஒரு கோல் கூட போடமுடியவில்லை. ஆனால் தூத்துக்குடி அணியினர் அடுத்தடுத்து கோல்களை அடித்து துவம்சம் செய்தனர்.,

இறுதியில் தூத்துக்குடி மாவட்ட அணி 9- 0 என்ற கோல் கணக்கில் தென்காசி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி 4-2 என்று கோல் கணக்கில் சேலம் மாவட்ட அணியை வீழ்த்தியது

தொடர்ந்து அரியலூர் மாவட்ட அணி 8-1 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியை வீழ்த்தியது மற்றொரு மைதானத்தில் நடந்த போட்டியில் மதுரை மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூர் மாவட்ட அணியை வீழ்த்தியது திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்ட அணிகள் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிவுற்றது

திருப்பூர் மாவட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் ராணிப்பேட்டை மாவட்ட அணியை வீழ்த்தியது விருதுநகர் மாவட்ட அணி 3-0 கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணியை வீழ்த்தியது ராமநாதபுரம் மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் திண்டுக்கல் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
காலை நேர கடைசி போட்டியாக கோயம்புத்தூர் மாவட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் கன்னியாகுமரி மாவட்ட அணியை வீழ்த்தியது
லீக் போட்டிகள் 3 மைதானங்களில் நடக்கிறது. மொத்தம் 29 மாவட்டங்கள போட்டியில் பங்கேற்க வந்துள்ளன. சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு குழுவினர் தமிழக அணிக்காக தேர்வு செய்து வருகிறார்கள். கடைசி இரண்டு நாட்கள் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும்







