இந்திய ஜூனியர் ஆக்கி அணி ஜூலை 5 முதல் 18ஆம் தேதி வரை பெல்ஜியத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட 18 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணி வீரர்களை இன்று ஆக்கி இந்தியா அறிவித்தது . இதில் தமிழக வீரரும் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியின் வீரருமான மணிமாறன் தேர்வாகி இந்திய அணிக்காக விளையாட உள்ளார். தேர்வு பெற்ற மணிமாறனை ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன், செயலாளர் செந்தில் […]
கோவில்பட்டி, எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு
கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய மேலாளர் ஜி. மலையாண்டி மேற்பார்வையில் கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தீ விபத்துகள் ஏற்படக் காரணமான சூழ்நிலைகள், அவற்றைத் தடுக்கும் முறைகள், அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் 101, 112 ஆகிய அவசர உதவி எண்களின் […]
1908 ஜூன் 30-ல் சைபீரியாவில் நிகழ்ந்த துங்குஸ்கா விண்கல் வீழ்ந்த தினத்தின் நினைவாக ஆண்டுதோறும் ஜுன் 30ம் தேதி சர்வதேச விண்கற்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பூமிக்கு விண்கற்களால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், விண்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். அதன்படி இன்று (ஜூன் 30) தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச விண்கற்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ […]
சென்னை பெரம்பூர் கிருஷ்ணதாஸ் ரோட்டை சேர்ந்தவர் கனகராஜ் (73). இவர் தூத்துக்குடி மில்லர்புரம் பெந்தகோஸ்தே சபையின் தலைமை மதபோதகராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு, சபையின் ஊழியரான குமரி மாவட்டம் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த டைட்டஸ் (41) என்பவர் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதை கனகராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக, டைட்டஸ் மற்றும் உதவி போதகர் ஜான் தாமஸ் (57) ஆகியோர் கனகராஜைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதன்படி, கடந்த 4.10.2016 […]
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை 2023-ம் ஆண்டில் ‘டி.எம்.கே. பைல்ஸ்’ என்ற பெயரில், பலரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு சொத்து விவரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து அண்ணாமலை மீது டி.ஆர். பாலு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலையே குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. […]
கரூர் தொகுதியில் இருந்து முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதாகல் சட்டசபையில் அ.தி.மு.க. பலம் மேலும் குறைந்தது . அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் மரகதம் குமரவேல், ஜெயகுமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகியோர், தங்களின் எம்.எல்.ஏ., பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, கரூர் தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை தலைமை செயலகத்திற்கு வந்தார். சபாநாயகர் பிரபாகரை சந்தித்து, தன் பதவியை ராஜினாமா […]
விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி ஒருவர் காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், அம்மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ம […]
கோவில்பட்டியில் சாலை சீரமைப்பில் கவனம் செலுத்தாத அதிகாரிகளை கண்டித்து, காதுகளில் பூ வைத்து
கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக சாலையை சீரமைக்கப்படாததை கண்டித்தும், சாலை சீரமைப்பில் கவனம் செலுத்தாத அதிகாரிகளை கண்டித்தும் தமாகாவினர் காதுகளில் பூக்களை வைத்துக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் விக்னேஷ் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் வைரம், மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துசாமி, திருமுருகன், மாவட்ட பொதுச் செயலாளர் அய்யாதுரை, மாவட்ட விவசாய அணி தலைவர் […]
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுவதாகவும், அரசின் பல்வேறு சேவைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகம் வரும் மக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு அலைய விடுவதாகவும் கூறப்படுகிறது. கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலவும் லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், லஞ்சம் கேட்டு மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் முன்பு புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட […]
கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெரு வைச் சேர்ந்த சதாம் உசேன், அப்பகுதி யில் மீன் கடைநடத்தி வரு கிறார். இவரது கடைக்கு வந்த மூன்று நபர்கள், ரூ.500 நோட்டு ஒன்றைக் கொடுத்து சில்லறை கேட் டுள்ளனர். அவரும் அந்த நோட்டை பெற்றுக் கொண்டு சில்லறை பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து அந்த ரூபாய்நோட்டைச் சரிபார்த்த போது, அது அசல் நோட்டு அல்ல கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. தொடர்ந்து 3 […]







