இந்திய ஜூனியர் ஆக்கி அணிக்கு கோவில்பட்டி வீரர் மணிமாறன் தேர்வு

இந்திய ஜூனியர் ஆக்கி அணி ஜூலை 5 முதல் 18ஆம் தேதி வரை பெல்ஜியத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட 18 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணி வீரர்களை இன்று ஆக்கி இந்தியா அறிவித்தது .

இதில் தமிழக வீரரும் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியின் வீரருமான மணிமாறன் தேர்வாகி இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.
தேர்வு பெற்ற மணிமாறனை ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன், செயலாளர் செந்தில் ராஜ்குமார், ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ,பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா, கோவில்பட்டி சிறப்பு ஆக்கி விளையாட்டு விடுதி பயிற்சியாளர் முத்துக்குமார் ஆகியோர் பாராட்டி பெல்ஜியத்தில் சிறப்பாக விளையாட வாழ்த்துக் கூறினர்.
இந்திய ஜூனியர் ஆக்கி அணிக்கு தேர்வாகி இருக்கும் கோவில்பட்டி வீரர் மணிமாறன்,
கோவில்பட்டி எஸ். எஸ். டி.எம்.கல்லூரியில் உடற்கல்வி துறை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஆவார்.

அவருக்கு கல்லூரி செயலாளர்கண்ணன்,முதல்வர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.







