கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் வருடாபிஷேகம் விழா; 31-ந் தேதி நடக்கிறது
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட
பத்திரகாளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா 31.8.2026 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10. மணிக்குள் நடக்க இருக்கிறது.

பக்தர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு அருள்தரும் அன்னை பத்திரகாளியம்மனை தரிசித்துப் பேரானந்த பெருவாழ்வு பெற கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது,
31 ந் தேதி `காலை காலை 9.30 மணிக்கு மேல்10 மணிக்குள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம்,\ நடக்கிறது,.மேலும் மகா கணபதி ஹோமம், சக்தி ஹோமம்,பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்த்ர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூரணாகுதி, அபிஷேகம் கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்கள் அபிஷேகம், மூலஸ்தான கும்ப அபிஷேகம். தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். நடக்கிறது.
மதியம் 12.00 மணியளவில் கோவில் எதிர்புறம் உள்ள பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் அன்னதானம் நடைபெறும். இரவு 7 மணி அளவில் பத்திரகாளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா முதல் நாள் மண்டகப்படிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள் சார்பில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் பத்திரகாளியம்மன் திருவீதி உலா வருதல். நடைபெற இருக்கிறது.

பூஜையை நடத்திக் கொடுப்பவர் செல்வம் பட்டர், தூத்துக்குடி.விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கம் திருக்கோவில் குழுவினர்கள் செய்து வருகிறார்கள். பக்தர்கள் பூஜைப்பொருட்கள், யாகசாலை பொருட்களை காணிக்கையாக வழங்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,







