• April 27, 2024

Month: March 2024

கோவில்பட்டி

செல்பி மோகம்: 100 அடி பள்ளத்தில் விழுந்த தூத்துக்குடி வாலிபர்

சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை  அதிகரித்து காணப்படுகிறது தூத்துக்குடியை சேர்ந்த சில வாலிபர்கள்  இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற வாலிபர்  100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.. இதனால் உடன் இருந்த நண்பர்கள் பதறிப்போனார்கள். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதை […]

தூத்துக்குடி

 தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 14.48 லட்சம் வாக்காளர்கள்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில்.. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 14,48,179 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் 7,08,244 ஆண்கள் 7,39,720 பெண்கள் , 215 மூன்றாம் பாலினத்தோர் சேர்த்து மொத்தம் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர். மக்களவை தொகுதியில் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் விவரம் வருமாறு:- 1. விளாத்திகுளம் : ஆண்கள் 102845, பெண்கள் 106607 மூன்றாம் பாலினம் 20 என மொத்தம் 2,09,472 வாக்காளர்கள் […]

செய்திகள்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் செய்தவர்கள்; திருநாவுக்கரசர் அறிக்கை

திருச்சி தொகுதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றியவர் திருநாவுக்கரசர். இந்த முறை அவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்துள்ள திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியை மீண்டும் காணிக்கை ஆக்குகிறேன், கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது தொகுதி வளர்ச்சி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் பங்குனி விழா; 7 அடி நீள அலகு

கோவில்பட்டி மில் தெருவில் அமைந்துள்ள  மகா புவன காந்தாரி அம்மன் கோவில் பங்குனி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி முகூர்த்தக்கால் நடுவிழா நடைபெற்றது. அதை முன்னிட்டு முதல் நாள் காந்தாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது 2-ம் நாள் அம்மனுக்கு சிறப்பு ஹோமம் அபிஷேகம் நடைபெற்றது 3- நாள் அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. 4- நாள்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தெம்மாங்கு கிராமிய […]

கோவில்பட்டி

மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் ரூ.86 ஆயிரம் பறிமுதல்

தமிழகத்தில் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் தூத்துக்குடி கூட்டுறவு வங்கி தணிக்கையாளருமான ரவிகுமார் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ‘ அப்போது தூத்துக்குடி அண்ணா நகர்12-வது தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(வயது 53) என்பவர் குறுக்குசாலையில்  இருந்து ஓட்டப்பிடாரத்திற்கு தனது மோட்டார் […]

கோவில்பட்டி

பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பாஜக  சார்பில்  தேர்தல் ஆலோசனை கூட்டம் ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ஆர் பி பாலு முன்னிலை வகித்தார் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் ..ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து நன்றி கூறினார்.

ஆன்மிகம்

நவகிரகங்களை வழிபடுவது எப்படி?

கோவில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான் நவகிரக வழிபாடு முறை சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்… அப்படி சுற்றும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பன போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமான பதில் இதோ…. ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். எல்லோருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று வழிபட்டு […]

செய்திகள்

அமைச்சர்களுக்கு எதிரான மறுஆய்வு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடமாற்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ஆனந்த் வெங்கடேஷ் 2019ல் நியமிக்கப்பட்டார். 2020ல் நிரந்தர நீதிபதி ஆனார். அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு மறுஆய்வு வழக்கை தாமாக முன்வந்து எடுத்து நடத்தினார். இதனைத் தொடர்ந்து, இதனிடையே மறு ஆய்வு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை மாற்ற வேண்டும் என பொன்முடி உச்ச நீதிமன்றம் சென்றார். பின்னர் சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ஆனந்த் வெங்கடேஷ் மாற்றப்பட்டார். மீண்டும் சென்னை உயர் […]

கோவில்பட்டி

நாலாட்டின்புதூர் பகுதியில் கனிமொழி வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் பகுதியில் நேற்று திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். வழிநெடுக கூடி நின்ற மக்கள்  மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பிரசசாரத்தில் பேசிய கனிமொழி கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஒரு கோடியே  15 லட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமை தொகை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். சில பேருக்கு வரவில்லை என்றால், நிச்சயம் தேர்தல் முடிந்த பிறகு ஒன்றியத்தில் நமது ஆட்சி, இந்தியா கூட்டணி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தொகுதியை ஒதுக்கி வைத்துள்னர்; கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ வில்லிசேரி, சத்திரப்பட்டி, இடைச்செவல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:- தேசிய கட்சிகளினால் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படுவதில்லைமாற்றான் தாய் மனப்பான்மையுடன் தேசிய கட்சிகள் நடந்து கொள்கின்றன தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நமது கொள்கைகளை வலியுறுத்த முடியாது தமிழகத்தில் 30 இடங்களில் அதிமுக வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது […]