• May 9, 2024

 தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 14.48 லட்சம் வாக்காளர்கள்

  தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 14.48 லட்சம் வாக்காளர்கள்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில்.. தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 14,48,179 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 7,08,244 ஆண்கள் 7,39,720 பெண்கள் , 215 மூன்றாம் பாலினத்தோர் சேர்த்து மொத்தம் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர். மக்களவை தொகுதியில் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

1. விளாத்திகுளம் : ஆண்கள் 102845, பெண்கள் 106607 மூன்றாம் பாலினம் 20 என மொத்தம் 2,09,472 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 2048பேர்.  

2. தூத்துக்குடி : ஆண்கள் 136716, பெண்கள் 143338 மூன்றாம் பாலினம் 71 என மொத்தம் 2,80,125 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 1881பேர்.

3. திருச்செந்தூர் : ஆண்கள் 116665, பெண்கள் 123189 மூன்றாம் பாலினம் 30 என மொத்தம் 2,39,884 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 2222.

4. ஸ்ரீவைகுண்டம்: ஆண்கள் 109476, பெண்கள் 112914, மூன்றாம் பாலினம் 3 என மொத்தம் 2,22,393 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 1790.

5. ஓட்டப்பிடாரம் (தனி) : ஆண்கள் 119032 பெண்கள் 124078 மூன்றாம் பாலினம் 58 என மொத்தம் 2,43,168 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 2384.

6. கோவில்பட்டி : ஆண்கள் 123510, பெண்கள் 129594, மூன்றாம் பாலினம் 33 என மொத்தம் 2,53,137 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 1658.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *