திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் கனிமொழியை சத்தித்து வாழ்த்து பெற்றனர்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 6 இடங்களில் 4 இடங்கள் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதில் திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்..கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 2ம் தேதி தொடங்கியது. திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (3/6/2025) மத்திய அரசு அனுப்பிய குழுவில் இடம்பெற்று ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகளுக்கு சென்று விட்டு சென்னை திரும்பிய கனிமொழியை சிஐடி காலனி இல்லத்தில், மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோர் சந்தித்தனர்.

அங்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழியிடம் வாழ்த்து பெற்றனர்.







