சர்வதேச கழுகுகள் தினம்: மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி

இயற்கையை சுத்தமாக பராமரிப்பதிலும்,நோய்கள் பரவுவதை தடுப்பதிலும் கழுகுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.பல கழுகு இனங்கள் உணவு மாற்றம் மற்றும் நச்சுத்தன்மை காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளன.
அழிந்து வரும் கழுகு இனங்களின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை சர்வதேச கழுகுகள் தினமாக உலக நாடுகள் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச கழுகுகள் தின விழிப்புணர்வு வர்ணம் தீட்டும் போட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டையராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் நடந்தது.
வர்ணம் தீட்டுதல் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கழுகு படத்திற்கு வர்ணம் தீட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வம் தலைமை தாங்கினார்.bகொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருகபூபதி முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வர்ணம் தீட்டுதல் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.







