• April 30, 2024

Month: April 2024

கோவில்பட்டி

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது 

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (29-ந்தேதி) தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. நாடார் உறவின்முறை சங்க தலைவர், கோவில் தர்மகர்த்தா, நிர்வாக குழு உறுப்பினர்கள்,மண்டகபடிதாரர்கள், மஞ்சள் நீராட்டு குழு இளைஞர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். இதற்கு இடையே கோவில் தங்க கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர். கொடி மரத்துக்கு தீபாராதனை காட்டியபோது பெண்கள் குலவை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கனகசபாபதி நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம விழா 

கோவில்பட்டி கனகசபாபதி நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம விழா, சரஸ்வதி மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தனலட்சுமி, தாயம்மாள்,சூரியா, லட்சுமி, ராஜேஸ்வரி, மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 37 வருடங்களுக்கு முன்பு கனகசபாதி பள்ளியில் படித்த மாணவி செண்பகவல்லி இன்று ராஜபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றுகிறார் அவருக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். மற்றும் சன் இந்தியா பள்ளியின் முதல்வர் ஆரோக்கிய ராஜா,மாநில நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார் அவரையும் பாராட்டினார்கள் விழாவில் 300க்கும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கம்பன் கழக 32-ம் மாதகூட்டம்

கோவில்பட்டிக் கம்பன் கழகத்தின் 32-ம் மாதக் கூட்டம் மந்தித்தோப்பு சாலை பகுதியில் அமைந்துள்ள புனிதஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கம்பம் கழக துணைத் தலைவர் ராஜாமணி தலைமையில் நடந்தது. கோவில்பட்டிக் கம்பன் கழக நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி,  கோவில்பட்டி ரீ-பிட் இயன்முறை சிகிச்சை மையம் பிஸியோதெரபி சிறப்பு நிபுணர் செல்வின் ஜூலியஸ்,கடம்பூர் தொழிலதிபர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செயலாளர் சரவணச் செல்வன் அனைவரையும் வரவேற்றார். மாணவர் உரை நிகழ்வில் முதலில் மதுரை கல்லூரி மாணவர் […]

கோவில்பட்டி

திருவள்ளுவர் மன்ற கூட்டம்

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற கூட்டம் நடந்தது. மருத்துவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மருத்துவர் பாலன் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி வரவேற்றார்.  மன்ற செயலாளர் நம்.சீனிவாசன் “சங்க இலக்கியத்தின் சாரல்” எட்டுத்தொகை காட்டும் எழில் மிகு வாழ்வியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனைவர் சம்பத்குமார், உரத்த சிந்தனை சிவானந்தம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்ச்சுடர் விருது பெற்ற திருவள்ளுவர் மன்ற இணைச்செயலாளரும், மகிழ்வோர் மன்ற இயக்குநருமான ஜான்கணேஷ் பாராட்டப்பட்டார்.பின்னர் ஜான்கணேஷ் ஏற்புரை வழங்கினார். மன்ற […]

கோவில்பட்டி

“கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு எழுத்தர் பதவிக்கு தனி இட ஒதுக்கீடு” கோவில்பட்டி மாநாட்டில்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கோவில்பட்டி கோட்ட 5-வது மாநாடு  நடந்தது. கோவில்பட்டி தலைமை அஞ்சலக வளாகத்தில் நடந்த மாநாட்டுக்கு கோட்டத் தலைவர் வி.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார் .  செயலாளர் பிச்சையா,பொருளாளர் பட்டுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சங்க துணை தலைவர் ஜி.கிருஷ்ணசாமி சங்க கொடியேற்றினார். கோட்ட அமைப்பு செயலாளர் ஹரிப்பிரகாசம் வரவேற்றார். மாநாட்டில், தமிழ் மாநில  தலைவர் என்.இராமசாமி, மாநில செயலாளர் ஜி.சாந்தமூர்த்தி, மேற்கு மண்டல செயலாளர் என்.தர்மலிங்கம், மாநில உதவிச் செயலாளர் […]

கோவில்பட்டி

அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் தொடர் மின்தடை ; பொதுமக்கள் கடும் அவதி

 கோவில்பட்டி அடுத்த அப்பனேரி பஞ்சாயத்து வெங்கடேஸ்வரா கார்டன்வேகமாக முன்னேறி வரும் பகுதி.தற்போது சுமார் 200 வீடுகள் உள்ளன.தொடர்ந்து பல வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.  வீடுகள் பெருகும் அளவுக்கு இங்கு அடிப்படை வசதிகள்இல்லை என்றே சொல்ல முடியும்.மெயின் ரோட்டில் மட்டும் தார் சாலை உள்ளது. தெருக்கள் முழுவதும் கல் சாலைகள் மற்றும் மண் சாலைகளாகத்தான் உள்ளன.  இந்தப் பகுதியில் வடிகால் வசதி கிடையாது. பஞ்சாயத்து சார்பில் குடிநீர் சப்ளையையும் கிடையாது. குப்பைகள் அகற்றும் வசதியும் இல்லை. இதனால் காலி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து : பெற்றோர் மீது நடவடிக்கை உண்டா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக போலீஸ் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவது 199 (a)ன் படி குற்றமாகும்.  மீறினால் மேற்படி இளஞ்சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. வாகனம் ஒரு வருட காலம் சிறை பிடிக்கப்படும். பெற்றோர்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதமும், 3 வாரம் முதல் 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் […]

தூத்துக்குடி

கோவில்பட்டி வாலிபரிடம் மதம் மாறினால் ரூ. 10 கோடி  தருவதாக கூறி ரூ.5

 கோவில்பட்டியைச் சேர்ந்தவாலிபர் ஒருவருக்கு IMO என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற ஐ. டி. யில் இருந்து தொடர்பு கொண்டு பேசியவர், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ. 10 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். மேலும் அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டடுள்ளார். அதனை நம்பி மேற்படி வாலிபர், அந்த நபருக்கு எதிரிக்கு ரூ.4,88,159/- பணத்தை ஜி.பே.மூலம் அனுப்பியுள்ளார். அதற்கு பின்னர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ; நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை 29-ந்தேதி தொடங்கி மே 8 -ந் தேதி வரை நடக்கிறது. கொடியேற்றம் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் கொடியேற்று விழா நடக்கிறது. அன்றைய தினம் 1-வது நாள் மண்டகப்படிதாரர் நாடார் தேங்காய், பழம், காய்கனி வியாபாரிகள் சங்கம். இரவு 7 மணிக்கு கோவில் கலையரங்கத்தில், “வாரியாரும் வள்ளலாரும் “ என்ற தலைப்பில் முனைவர் சி.தேவி சொற்பொழிவு […]

கோவில்பட்டி

சங்கடஹர சதுர்த்தி பூஜை: சிறப்பு அலங்காரத்தில் ஓடைப்பட்டி வன்னி விநாயகர்

கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அவருக்கு பல்வேறு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன, பூஜைகளை குருக்கள்  பிரசன்ன வெங்கடேஷ் செய்தார். தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.