சங்கடஹர சதுர்த்தி பூஜை: சிறப்பு அலங்காரத்தில் ஓடைப்பட்டி வன்னி விநாயகர்
கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அவருக்கு பல்வேறு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன, பூஜைகளை குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்தார்.
தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.