பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 10 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பெண் போலீசாரை அவதூறாகப் பேசிய வழக்கில், சவுக்கு சங்கரை உதகை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமையன்று போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து போலீசாரின் கோரிக்கையை ஏற்று ஒருநாள் […]
கோவில்பட்டியில் அனைத்து கட்சிகள் மற்றும் ஈராச்சி கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் ஸ்ரீவை எஸ்.சுரேஷ் தேவர் தலைமை தாங்கினார். தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கே.பி. ராஜகோபால், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் ஜி.பாபு, அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட அமைப்பு செயலாளர் எம்.செண்பகராஜ், தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் வேல்முருகன், அமமுக குமார் பாண்டியன், தேவரின […]
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டில் இருந்து 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்., முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் நேற்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர்.வயநாடு சென்ற […]
பணமோசடியில் கைதானவருக்கு ஜாமீன் வழங்ககூடாது- காஞ்சீபுரம் கோர்ட்டில் நடிகை கவுதமி ஆஜராகி மனுதாக்கல்
நடிகை கவுதமி தனக்கு மற்றும் தனது சகோதரருக்கு சொந்தமான நிலங்கள் விற்பனை மற்றும் பணம் பரிவர்த்தனை தொடர்பாக பல்வேறு மோசடிகள் செய்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நேரில் ஆஜராகி புகார் மனு அளித்தார்.அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அழகப்பன் ரகுநாதன் மற்றும் சுகுமாரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் மற்றொரு வழக்கில் அழகப்பன் மற்றும் பலராமன் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் இரு […]
பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து ஆசிரியர்கள் நேற்று முன்தினம் இரவு பஸ்சில் சென்னை புறப்பட திட்டமிட்டு […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜபுஷ்பம் (வயது 26) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது கணவர் கணவரான நவீன்குமார் (32) கைதானார். மபின்னர் அவர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம்நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட நவீன்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ 2,000/- அபராதமு, மேலும் 7 […]
60 வயது விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்; கோவில்பட்டி மாநாட்டில் வலியுறுத்தல்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் விவசாயிகள் கோரிக்கை மாநாடு நேற்று கோவில்பட்டியில் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அ.லெனின் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.குருசாமி, வி.கணேசமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் ஆர்.முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, மாநில துணைச் செயலாளர் எஸ்.நல்லையா, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பி.கரும்பன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்றுஅதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை – ஹவுரா பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரெயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன . இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.ரெயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து நேற்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் முண்டக்கை, சூரல்மலை,வைத்திரி ஆகிய […]