அரசியல் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
![அரசியல் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2024/07/82cf4c24-5a1e-4775-879f-fea33d7a3054-850x560.jpeg)
கோவில்பட்டியில் அனைத்து கட்சிகள் மற்றும் ஈராச்சி கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் ஸ்ரீவை எஸ்.சுரேஷ் தேவர் தலைமை தாங்கினார்.
தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கே.பி. ராஜகோபால், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் ஜி.பாபு, அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட அமைப்பு செயலாளர் எம்.செண்பகராஜ், தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் வேல்முருகன், அமமுக குமார் பாண்டியன், தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் ஏ.வெயிலுமுத்து பாண்டியன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் எஸ். செல்வம் என்ற செல்லத்துரை மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈராச்சி கிராமத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, ஊருக்கு வெளியே அங்கன்வாடிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ரத்து செய்து, ஊருக்குள் அங்கன்வாடி கட்டடத்தை கட்ட வேண்டும்.
இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள மோசடி பட்டாக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதற்கு துணை போன அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஈராச்சி கிராமத்தில் நடந்த ஒப்பந்த பணிகளை சிறப்பு தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)