வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணியில் தமிழக குழுவினர்
![வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணியில் தமிழக குழுவினர்](https://tn96news.com/wp-content/uploads/2024/07/5016134-chennai-04.webp)
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டில் இருந்து 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்., முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் நேற்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர்.
வயநாடு சென்ற தமிழ்நாடு அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கேரளாவுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து தமிழக அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குநர் தலைமையிலான 20 தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவின் 20 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)