• April 27, 2024

Month: December 2022

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 270 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;போலீஸ்

தூத்துக்குடி  மாவட்டத்தில் இந்த ஆண்டு காவல்துறையினர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 43 பேர், போக்சோ வழக்குகளில் ஈடுபட்டவர்கள் 14 பேர் உட்பட 270 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 593 வழக்குளில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி 22வது வார்டு பகுதியில் 2023 காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி

கோவில்பட்டி 22வது வார்டு பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு 2023 தினசரி காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். 22வது வார்டு உறுப்பினர் ஜேஸ்மின்லூர்து மேரி மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியில் வார்டு அவை தலைவர் மிக்கேல் ,வார்டு துணைச் செயலாளர் ராமர், வார்டு பிரதிநிதி கிருபாகரன் ,பொருளாளர் நாகராஜ், நகர இலக்கிய அணி துணை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் புத்தக கண் காட்சி தொடக்கம்

கோவில்பட்டியில் புத்தாண்டை முன்னிட்டு37 வது தேசிய புத்தக கண்காட்சி துவக்கம் டெல்லி நேஷனல் புக் டிரஸ்ட், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை சார்பில்கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் 37 வது தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா இன்று நடைபெற்றது.கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தேசிய புத்தக கண்காட்சிஜனவரி 12 வரை நடைபெற உள்ளது.புத்தக கண்காட்சியில் வரலாற்று புதினங்கள்,வாழ்க்கை வரலாறு,இலக்கியம்,நாவல்,சிறுகதைகள்,கட்டுரைகள்,ஆங்கில நாவல்கள்,போட்டித் தேர்வு நூல்கள்,உள்பட5000 தலைப்புகளில்1 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி […]

கோவில்பட்டி

தேசிய சப் -ஜூனியர் பெண்கள் கபடி : தமிழக அணிக்கு வெள்ளி பதக்கம்

32 வது தேசிய சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றது .இதில் தமிழக அணி இரண்டாம் பரிசு பெற்று வெள்ளி பதங்கத்தை தட்டி பறித்தது.தமிழக அணியில் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் வீராங்கனை கற்பகவள்ளி இடம்பெற்று ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி

புத்தாண்டு கொண்டாட்டத்தில்,பைக் ரேஸ், சென்றால் கைது ;தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி இன்று (31.12.2022) இரவு மற்றும் 2023ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான ஞாயிற்றுகிழமை அன்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது,           1) தூத்துக்குடியில் உள்ள பீச் ரோடு, அங்குள்ள பூங்காக்கள், புதிய துறைமுகம், தெர்மல்நகர் பீச் உட்பட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை. 2) நாளை 31.12.2022 அன்று இரவு பொதுமக்கள் பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பா.ஜனதா பொதுக்கூட்டம்

முன்னாள்  பிரதமர் வாஜ்பாய் 98-வது பிறந்ததினத்தை முன்னிட்டு தேசிய நல்லாட்சி தின பொதுக்கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன்கோவில் அருகில்  நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிரசாரபிரிவு சார்பில் இந்த கூட்டம் நடத்தபட்டது, கூட்டத்துக்கு பிரசார பிரிவின் மாவட்ட தலைவர் லட்சுமணக்குமார் தலைமை தாங்கினார்.துணை தலைவர் உத்தண்டு ராமன் முன்னிலை வகித்தார்,. பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேசா சென்னகேசவன், மாநில பொது செயலாளர் பொன் பாலகணேஷ், பிரசார பிரிவு மாநில செயலாளர் விக்னேஷ்,, மாவட்ட துணை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி  பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.   இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி பொருளாளர் சுப்பிரமணியன்  நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் […]

செய்திகள்

பிரதமர் மோடியின்  தாயார் மறைவு: தமிழகத்தில் பா.ஜ.க. அலுவலகங்களில் இன்று மாலை அஞ்சலி;

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பா.ஜக. அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் […]

செய்திகள்

தி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பம்; கொலை செய்ததாக 5 பேர்

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். முக்கிய பிரமுகர்களுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்து வந்தார். இதற்கிடையே கடந்த 22 ந்தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சென்னையில் இருந்து காரில் சென்றார். காரை அவரது […]

தூத்துக்குடி

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தில் ஆதார் எண் இணைக்க வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-  “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் சுமார் 6,554 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.2000 அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தபட்டு வருகிறது. தற்போது பராமரிப்பு உதவித் தொகை பெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளின் முழு விபரம் டிஜிட்டல் மயமாக்கப்படு வருகிறது. எனவே, ரூ.2000 பெறும் மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் குணமடைந்தோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், […]