அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த ஆர்.எம்.டி.ரவீந்திரன், இலக்கிய அணி துணை செயலாளர்
அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஆர்.எம்.டி.ரவீந்திரன். இவர் 1996 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி வெற்றி வாய்ப்பை இழந்தவர்.இருப்பினும் தொய்வில்லாமல் கட்சி பணியாற்றி வந்த ஆர்.எம்.டி.ரவீந்திரன், கடந்த 17.11.2021 அன்று அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் முதல் அமைச்சர் மு.க,.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பை தொடர்ந்து உடனடியாக தான் வகித்து வந்த வடசென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள இளங்கோ […]