இளைஞரை ஒரே இடத்தில் சந்தித்த 5 காதலிகள் கட்டிப்புரண்டு சண்டை
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய இளைஞர் ஒருவரை காரில் வந்த 4 பணக்கார பெண்கள், அந்த இளைஞரை கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்தனர்.மது போதையில் பெண்கள் செய்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதே போன்ற இன்னொரு சம்பவம் பீகாரில் நேற்று நடந்துள்ளது. ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அதுகுறித்த வீடியோ வைரலாகி உள்ளது.
பீகார் மாநிலம் சோன்பூரில் இளைஞர் ஒருவர் காதல் மன்னனாக இருந்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என்று 5 பெண்களை காதலித்து வந்ததாக தெரிகிறது. நேற்று தன்னுடைய காதலியுடன் சோன்பூரில் நடந்த கண்காட்சி ஒன்றுக்கு சென்றார். இதை அந்த இளைஞரின் இன்னொரு காதலி பார்த்துவிட்டார். அதுகுறித்து இளைஞரிடம் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டார். இதை அந்த இளைஞரின் இன்னொரு காதலியும் பார்த்துவிட்டார். அவர் ஆவேசமாக வந்து சண்டை போட்டார். இப்படியே மொத்தம் 5 காதலிகள் ஒரே இடத்தில் எதிர்பாராமல் வந்துவிட்டனர்.
இவர்களுக்கு நடுவே அந்த காதலன் மாட்டிக்கொண்டார். 5 பேரையும் ஒரே சமயத்தில் இளைஞர் சாமர்த்தியமாக ஏமாற்றி வந்துள்ளார். 5 பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும், கண்காட்சியிலேயே சண்டை போட்டுக்கொண்டனர்.
இவர்கள் சண்டைபோட்டதை அங்கிருந்த பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்ததுடன், சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்தனர். ஆனால், யாரையுமே தடுக்க முடியவில்லை.
“அவன் என் லவ்வர், அவன் என்னுடைய பாய்பிரண்ட்” என்று 5 பெண்களும் மாற்றி மாற்றி சரமாரியாக தாக்கி கொண்டார்கள். இந்த வீடியோவை பார்த்ததும் நெட்டிசன்கள், தங்கள் பாணியில் கருத்துக்களை அள்ளி வீசி வருகிறார்கள்.
छपरा, बिहार -एक बॉयफ्रेंड के लिए भिड़ गईं 5 लड़कियां
— Ankit Kumar @Journalist (@AnkitAnitaSingh) November 29, 2022
एक गर्लफ्रेंड के साथ सोनपुर मेला घुमाने लाया था, फिर क्या था जमकर बवाल हो गया।#Bihar #sonpurmela #ViralVideos #viral #Fights #love #girls #Girlfights #GIRLFRIEND #boyfriends pic.twitter.com/GHvUJsZ4IR