• April 27, 2024

Month: February 2024

தூத்துக்குடி

ராக்கெட் ஏவுதளம் விளம்பரத்தில் சீன கொடி சர்ச்சை: தவறு நடந்து விட்டதாக அமைச்சர்

தூத்துக்குடி, துறைமுகத்தில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற விழாவின் போது  குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதையொட்டி அன்றைய தினம் வெளியான காலை பத்திரிகையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் கொடுத்த விளம்பரம் சர்ச்சையை கிளப்பியது. அதில் ராக்கெட் ஏவுவது போல் ஒரு படம் இருக்கிறது. அதில் சிவப்பு நிறத்தில் ஸ்டார் குறியீடுகளுடன் ராக்கெட் இடம்பெற்றுள்ளது. இது சீன நாட்டு கொடியை போன்றே இருப்பதால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. பிரதமர் மோடியும் இது பற்றி விமர்சித்து […]

செய்திகள்

தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு

தி.மு.க மகளிர் அணி, மகளிர் தொண்டரணி. பிரச்சாரக்குழு. சமூக வலைத்தளக் குழு, ஆலோசனைக்குழு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநகர மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (29/02/2024) சென்னை அடையார் பகுதியில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கத்தில் நடைபெற்றது. திமுக துணைச் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர்  சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மாநில மகளிரணி செயலாளர் […]

கோவில்பட்டி

தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த கோவில்பட்டி மாணவர்கள்

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும்  தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 9, 10, 11, 12ம் வகுப்பு வரை வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் 4 வருடத்திற்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த 3ம் தேதி  தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு பிப்ரவரி 28ம் தேதி (நேற்று) தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.இதில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் […]

செய்திகள்

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள்

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே/பாலகிருஷணன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் -மார்க்சிஸ்ட் […]

பொது தகவல்கள்

சாதிச் சான்றிதழ் – தெரிந்ததும்… தெரியாததும்….!

சாதிச் சான்றிதழ் தற்போது இணைய வழியில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேனுவலாக வழங்கப்படுவது இல்லை. பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ்  பெற பெற்றோரின் சாதி தொடர்பான ஆவணங்கள் அவசியம். பெற்றோரிடம் சாதி சான்றிதழ் இல்லை என்றால் அவர்களின் பள்ளி மாற்றுச் சான்று ஆவணங்களை வைத்து முதலில் அவர்களுக்கு சாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். தந்தையின் சாதியைத்தான் குறிப்பிட்டு சாதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பெற்றோர் இருவரும் வேறு வேறு சாதியாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு […]

கோவில்பட்டி

இலவச சூரியஒளி மின்சார திட்டம்: அஞ்சல் அலுவலகங்களில் பதிவு செய்யலாம்

இந்தியாவில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச சூரியஒளி  மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டமே பிரதம மந்திரியின்  இலவச சூரிய ஒளி  மின்சார திட்டம். இத்திட்டத்தின் மூலம் வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் மீது சோலார் பேனல் நிறுவ சோலார் பேனல்களின் விலையில் 40% மானியம் வழங்கப்படும். ஆஸ்பெஸ்டாஸ் சீட் அடிப்படையிலான கூரைகளை கொண்ட வீடுகளின் தரவுகள் பதிவு செய்ய முடியாது. இத்திட்டத்தின் மூலம் மின் கட்டணத்தை சேமிக்க முடியும். காலியான கூரையை பயன்படுத்தி […]

கோவில்பட்டி

குளத்தூரில் தே.மு.தி.க. ஒன்றிய அலுவலகம் திறப்பு

விளாத்திகுளம் அருகே  குளத்தூரில் மேற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் மாரியப்பன் தலைமையில் கிழக்கு ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி மாவட்டதுணைசெயலாளர் ராஜபாண்டி ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய அலுவலகத்தை மாவட்டசெயலாளர் சுரேஷ் திறந்துவைத்தார். மறைந்த விஜயகாந்த்  உருவபடத்துக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு உணவுவழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக  மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், மாவட்டகேப்டன்மன்றம் மேகலிங்கம், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ், நகர செயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட மாணவரணி மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

கோவில்பட்டி

ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

.பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதிலும், ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மகா சங்கடஹர சதுர்த்தியாகும். மகிமை நிறைந்த மாசி மாத  சங்கடஹர சதுர்த்தி விரதம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாளாக கருதப்பட்டது. கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வ்ன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் […]

செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில் இருந்து ரோகினி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது  

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி இன்று காலை அடிக்கல் நாட்டினார்.. இதனை கொண்டாடும் விதமாக இஸ்ரோ சார்பில்  குலசேகரன்பட்டினத்தில் இருந்து `ரோகினி’ என்ற சிறிய ரக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது,. ரோகிணி ராக்கெட்டில் காற்றின் திசை வேகத்தை அளவிடும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத், திருச்செந்தூரில் .கூறியதாவது:- இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் அமைந்து உள்ளது. குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம். […]

ஆன்மிகம்

உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் எல்லோரா கைலாசநாதர் கோவில்

பண்டைய காலத்தில் முக்கிய தெய்வமாக சிவனையே வழிபட்டு வந்துள்ளனர்.ஆகையால் சிவனுக்காக பல முக்கியமான கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரிலிருந்து 29 கி.மீ.தொலைவில்,1200 ஆண்டுகள் பழமையான பண்டைய காலத்து இந்து கோவில் அமைந்துள்ளது. இதனை கைலாசா கோவில் என்று அழைப்பார்கள்.இதனின் முக்கிய தெய்வம் சிவன். சிவனை முக்கிய தெய்வமாக கொண்டு கட்டப்பட்ட 34 பெருமைகள்  வாய்ந்த கோவில்களில் இது ஒன்றாகும்.இதனை எல்லோரா குகை( Ellora Caves)கோவில் என்றும் அழைப்பார்கள். 8 ஆம் நூற்றாண்டில் திராவிட கட்டிட […]