• May 9, 2024

தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு

 தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு

தி.மு.க மகளிர் அணி, மகளிர் தொண்டரணி. பிரச்சாரக்குழு. சமூக வலைத்தளக் குழு, ஆலோசனைக்குழு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநகர மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (29/02/2024) சென்னை அடையார் பகுதியில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கத்தில் நடைபெற்றது.

திமுக துணைச் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர்  சிறப்புரையாற்றினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மாநில மகளிரணி செயலாளர் ஜெ.ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.இராணி, மகளிரணி இணை செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டரணி இணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட, மாநகர அமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *