தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த கோவில்பட்டி மாணவர்கள்
![தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த கோவில்பட்டி மாணவர்கள்](https://tn96news.com/wp-content/uploads/2024/02/f6b95990-b9ee-4f55-b375-d29c62ce87eb-850x560.jpeg)
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 9, 10, 11, 12ம் வகுப்பு வரை வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் 4 வருடத்திற்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கடந்த 3ம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு பிப்ரவரி 28ம் தேதி (நேற்று) தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.இதில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 11 பேர் தேர்வில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனி செல்வம் தலைமை தாங்கினார்..சங்க பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், பத்ரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிச் செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள்,பள்ளிக் குழு உறுப்பினர்கள் மணிக்கொடி,பொன் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி தலைமையாசிரியை செல்வி நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)