திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள்
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே/பாலகிருஷணன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் மற்ற தோழமை கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (29.2.24) தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு.கழகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கலந்து பேசியதில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்த நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது,.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்னனர்.