• April 27, 2024

Month: February 2023

செய்திகள்

மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டைரெயில்  பாதை இணைப்பு பணிக்காக ரெயில் போக்குவரத்தில் மாற்றம்-பல

பயணிகளின் வசதிக்காக ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரெயில்கல்  இயக்கவும் மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காலமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்: மார்ச் 7 வரை பாலக்காடு – திருச்செந்தூர்  விரைவு ரெயில் (16731),   மார்ச் 6 வரை திருச்செந்தூர் – பாலக்காடு  விரைவு ரெயில் (16732), மதுரை – ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரெயில்கள் (06651/06652, […]

சினிமா

அரைகுறை ஆடை பெண்ணுக்கு பதில்: சர்ச்சையில் சிக்கிய நடிகர்-மகன் விளக்கம்

இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடிப்பில் புலிவால், உள்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ள இவருக்கு இயக்குனராக பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததன் காரணமாக தற்போது முழுநேர நடிகராக களமிறங்கி உள்ளார் ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள மாரிமுத்து.  தற்போது சீரியலிலும் கலக்கி  வருகிறார். இப்படி பிரபலமான  நடிகராக இருக்கும்  மாரிமுத்து தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி […]

செய்திகள்

தி.மு.க.வுடன் கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது – கமல்ஹாசன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார். ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது. அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எனக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. முதல்-அமைச்சருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படபிடிப்பை ஒத்திவைத்துவிட்டு வந்துள்ளேன். சவால்களை சந்தித்து படிப்படியாக உயர்ந்து முதல்-அமைச்சரானவர் […]

செய்திகள்

கார் மோதி 3 மாணவர்கள் உயிரிழப்பு; முதல் அமைச்சர் இரங்கல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறி இருப்பதாவது:- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ரபிக் த/பெ.சாமுவேல் (வயது 13), விஜய், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி: ஏ.டி.எம்.இயந்திரத்தில் 200 ரூபாய்க்கு பதில் 20 ரூபாய் நோட்டுகள் வந்ததால் அதிர்ச்சி

கோவில்பட்டியில் ஓட்டல்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் தனியார் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பவர் அய்யப்பன். இவர் நேற்று I தனியார் ஏ.டி.எம்.மையத்தில் வங்கி அட்டையை சொருகி  ரூ.3,500 எடுத்தார். ஆனால் ரூ,3,140 மட்டுமே வந்தது. அதாவது இரண்டு 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன், வங்கியில் புகார் அளித்தார். வங்கி ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் வைக்கும் போது  நடத்துள்ள குளறுபடி தெரிய வந்தது. உடனே […]

கோவில்பட்டி

தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்; கடம்பூர் ராஜு

பட்டியல் வெளியேற்ற இயக்கமும், கோவில்பட்டி தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகில் இன்று காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் இரா.மாடசாமி, பொருளாளர் பெரியதுரை, பா,ஜனதா கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்..ஏ.கலந்து கொண்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரக்கோரி போராட்டம் வலுக்கிறது

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூடுதல் பஸ் நிலையம் பல ஆண்டுகளாக பயனற்று கிடக்கிறது. இந்த வழியாக  செல்லும் வெளியூர் பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்துக்குள் சென்று வெளியே வருவது கிடையாது. அதற்கு மாறாக  அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் பயணிகளை உள்ளே சென்று இறக்கி விடாமல் வெளியிலேயே இறக்கி விட்டு செல்கின்றன,. இதுவே இந்த ஊர் மக்களுக்கு பழகிப்போய்விட்டது. சில பஸ் டிரைவர்கள் சர்வீஸ் ரோட்டில் வந்து திரும்புவதை தவிர்க்கும் வகையில் மேம்பால இறக்கத்தில் […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது; பொது தேர்தலைவிட அதிக வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். . இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக  முக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீத தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவாகி இருந்தன, ஈரோடு கிழக்கில் மொத்தம் 52 […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் மார்ச் 1ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும்

தூத்துக்குடி – மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் 1வது கேட், 2வது கேட், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தூத்துக்குடி முதல் மீளவிட்டான் வரை இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் வருகிற 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மேலூர் ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என்று  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி

தூத்துக்குடி: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் குவிந்தன

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  (27.2.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் க.கவுரவ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா […]