• May 9, 2024

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரக்கோரி போராட்டம் வலுக்கிறது

 கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரக்கோரி போராட்டம் வலுக்கிறது

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூடுதல் பஸ் நிலையம் பல ஆண்டுகளாக பயனற்று கிடக்கிறது. இந்த வழியாக  செல்லும் வெளியூர் பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்துக்குள் சென்று வெளியே வருவது கிடையாது.

அதற்கு மாறாக  அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் பயணிகளை உள்ளே சென்று இறக்கி விடாமல் வெளியிலேயே இறக்கி விட்டு செல்கின்றன,. இதுவே இந்த ஊர் மக்களுக்கு பழகிப்போய்விட்டது.

சில பஸ் டிரைவர்கள் சர்வீஸ் ரோட்டில் வந்து திரும்புவதை தவிர்க்கும் வகையில் மேம்பால இறக்கத்தில் நான்குவழி சாலையில் நிறுத்து பயணிகளை இறக்கி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்..

இதன்காரணமாக இந்த பகுதில் அடிக்கடி விபத்த்துகள் நடந்து வருகின்றன, சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இருந்து பஸ்சில் வந்த அரசு பெண் அலுவலர் ஒருவர் நான்குவளிசாலையில் இறக்கி விடப்பட்டார். அவர் பின்னர் நான்கு வழி சாலையை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் மோதியில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து வலியுருத்தபப்ட்டு வருகிறது.

அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் பயணிகளை கூடுதல் பஸ் நிலையத்திற்கு உள்ளே போய் இறக்கி விட வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்,

பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கினார் மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்  பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து  சென்றனர்.

இது போல் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் [போராட்டம் வலுத்து வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *