தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்; கடம்பூர் ராஜு பங்கேற்பு
பட்டியல் வெளியேற்ற இயக்கமும், கோவில்பட்டி தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகில் இன்று காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் இரா.மாடசாமி, பொருளாளர் பெரியதுரை, பா,ஜனதா கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்..ஏ.கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொண்டனர்.