கோவில்பட்டி: ஏ.டி.எம்.இயந்திரத்தில் 200 ரூபாய்க்கு பதில் 20 ரூபாய் நோட்டுகள் வந்ததால் அதிர்ச்சி
![கோவில்பட்டி: ஏ.டி.எம்.இயந்திரத்தில் 200 ரூபாய்க்கு பதில் 20 ரூபாய் நோட்டுகள் வந்ததால் அதிர்ச்சி](https://tn96news.com/wp-content/uploads/2023/02/04d01610-990a-4fff-bf7b-754ad928eb39-850x560.jpg)
கோவில்பட்டியில் ஓட்டல்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் தனியார் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பவர் அய்யப்பன்.
இவர் நேற்று I தனியார் ஏ.டி.எம்.மையத்தில் வங்கி அட்டையை சொருகி ரூ.3,500 எடுத்தார். ஆனால் ரூ,3,140 மட்டுமே வந்தது. அதாவது இரண்டு 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன், வங்கியில் புகார் அளித்தார். வங்கி ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் வைக்கும் போது நடத்துள்ள குளறுபடி தெரிய வந்தது. உடனே அந்த ஏ.டி.எம்.மையம் மூடப்பட்டது,.
ஏ.டி.எம்.இயந்திரத்தில் குறைவாக பணம் வந்தது பற்றி உரிய விசாரணை நடத்தி அந்த பணம் திரும்ப தரப்படும் என்று வங்கி நிர்வாகம் உறுதி அளித்தது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)