தொழில் முனைவோர் கருத்தரங்கம்.
Oplus_16908288
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மூலம் தொழில் முனைவோர் விழிப்புணர்வு, எப்படி தொழில் தொடங்குவது, சிறு, குறுந்த் தொழில் ஆரம்பிப்பதற்கான அரசு திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான தமிழ்நாடு அரசு ஆதரவுகள் ஆகியவை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கி பேசினார்.கல்லூரி முதல்வர் ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கில் முன்னாள் மாவட்ட தொழில் முனைவோர் திட்ட அலுவலர் ஆனந்தன் மாணவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு பற்றி பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் ஷர்மிளா தேவி மாணவர்களுக்கு எப்படி தொழில் தொடங்குவது பற்றி மிகவும் எளிதாக எடுத்துறைத்தார். மாவட்ட தொழில் முனைவோர் திட்ட மேலாளர் முனைவர் சுவைதரன் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். முடிவில் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி நன்றி கூறினார்.








