• April 16, 2024

Month: July 2022

கோவில்பட்டி

உணவு பாதுகாப்பு: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் ஈட் ரைட் மேளா – 2022 என்ற தலைப்பில் உணவு பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி,வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிடவும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார் . பள்ளி முதல்வர் […]

தூத்துக்குடி

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வீடுகள் கட்டும் திட்டம்; கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதல் கட்டமாக வீடுகள் கட்டப்படவுள்ளன.இந்த இடத்தினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையெடுத்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, மாப்பிள்ளையூரணி, குளத்துள்வாய்பட்டி ஆகிய 3 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், மறுவாழ்வு மையங்களில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். […]

கோவில்பட்டி

காமநாயக்கன்பட்டியில் விண்ணேற்பு பெருவிழா; ஆகஸ்டு 6 தொடக்கம்

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புதுமை நகரில் புனித பரலோக மாதா திருத்தலம் உள்ளது.கத்தோலிக்க விசுவாச பயணத்தில் 422 ஆண்டுகளை கடந்து மறைபணித்தலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க 337-ம் ஆண்டு விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்டு 6 -ந்தேதி தொடங்கி, 15-ந்தேதி வரை நடக்கிறது.6 -ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. அன்றையை தினம் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது.7-ந்தேதி மாலை 6.3௦ மணிக்கு புதுநன்மை விழா நடக்கிறது. 13-ந் தேதி இரவு 9 […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே கோவில், மயானம் இடத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் தர்ணா

கோவில்பட்டியை அடுத்த முடுக்கு மீண்டான்பட்டி எஸ்.டி.ஏ.சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் இன்று நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் கூடி திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.ஊர் நாட்டாமை லெட்சுமணன், 2-வது வார்டு உறுப்பினர் சந்தனமாரியம்மாள். புரட்சி பாரதம் மாவட்ட இளைஞர் அணி செயலளார் கலைச்செல்வன், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் எஸ்.டி.ஏ.சர்ச் தெருவில் ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 2௦௦ குடும்பங்கள் […]

தூத்துக்குடி

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளை முடக்குவது பற்றி போலீசாருக்கு அமலாக்க துறை அதிகாரி

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் கடத்தல், கந்துவட்டி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகளின் சொத்தை சட்டப்படி முடக்குவது எப்படி என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இந்த் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை மண்டல அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் நந்தினி கலந்து கொண்டு சட்டப்படி […]

கோவில்பட்டி

கோவில் கொடை விழாவில் திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்றுக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நேற்று நடைப்பெற்றது.இதனையொட்டி மாலை 5 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி கோவில் திருவிளக்கு அலங்கரிக்கப்பட்டு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை தீபாராதனை காட்டப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டதுபூஜைகளை சங்கரேஸ்வரி கோவில் அய்யர் சுப்பிரமணியன், காளியம்மன் கோவில் பூசாரி சுப்புராஜ், கார்த்திக் ஆகியோர் செய்தனர். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, […]

தூத்துக்குடி

தூத்துக்குடி பஸ் நிலைய கடைகளில் கலெக்டர் ஆய்வு; வாழை இலையில் எண்ணெய் பதார்த்தங்களை

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலைகளை பயன்படுத்தும்படி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், இன்று (29.7.2022) விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை உணவு வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு […]

செய்திகள்

2 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; கூட்டம் திடீர் அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவுகிறது, நேற்று முன்தினம் கேரள பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது,மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்த போது வெள்ளபெருக்கு அதிகரித்தது. இதனால் அங்கிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.இதற்கிடையே வெள்ளத்தில் 5 பேர் சிக்கிகொண்டனர். இதில் 3 பேர் காப்பாற்றப்பட்டனர். 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்து போனார்கள். இதை தொடர்ந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று ஆடி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஆணையாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய 50-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நகர்மன்ற தலைவர் கருணாநிதி பேசுகையில். “எல்லா உறுப்பினர்களிடமும் அவர்வர் பகுதியில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வந்து செல்லும் ரெயில்களின் புதிய நேரம்

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரெயில்நிலையமாக கோவில்பட்டி ரெயில்நிலையம் விளங்குகிறது. கோவில்பட்டி வழியாக விருதுநகர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இரண்டாவது பிளாட்பாரத்திலும், கோவில்பட்டி வழியாக வாஞ்சி மணியாச்சி மார்க்கமாக செல்லும் ரெயில்கள் முதல் பிளாட்பாரத்திலும் தற்போது வந்து செல்கின்றன.கோவில்பட்டி வந்து செல்லும் வெளியூர் ரெயில்கள் நேரம் கடந்த 12 ந் தேதி முதல் மாற்றி அமைக்கபட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு