உணவு பாதுகாப்பு: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள்
தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் ஈட் ரைட் மேளா – 2022 என்ற தலைப்பில் உணவு பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி,வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிடவும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார் .
பள்ளி முதல்வர் பிரபு கிருஷ்ணன், ரோட்டரி சங்க இளைஞர் பிரிவு தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆங்கில ஆசிரியை கிருத்திகா அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு தொடர்பான போட்டிகளை தொடக்கி வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
]இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ராஜா, உடற்கல்வி ஆசிரியர் லட்சுமணபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை கனகராணி நன்றி கூறினார்.