தனியார் விடுதி மதுபாரில் விதியை மீறி மது விற்பனை; 2 பேர் கைது

 தனியார் விடுதி மதுபாரில் விதியை மீறி  மது விற்பனை; 2 பேர் கைது

கோவில்பட்டியில், தனியார் விடுதி மதுபாரில் போலீசார் திடீர் சோதனை நடத்தி 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் சோதனை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் விடுதி மதுபாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் தனியார் விடுதி மதுபாரில் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது விதியை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் மதுவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த ரூ.28 ஆயிரத்து 500 மற்றும் 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மது விற்பனை செய்ததாக கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கார்த்திக் (வயது 29), வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சிவா (29) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரி கண்ணன், ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீசார் மந்திதோப்பு கிராம பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த அருணாசலம் மகன் மாரியப்பன் (46) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 70 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இவற்றை கைப்பற்றியதுடன் மாரியப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *