• October 27, 2026

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், புழல் சிறையில் அடைப்பு

 முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், புழல் சிறையில் அடைப்பு

ரூ. 100 கோடி ஊழல் வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அன்பில் மகேஷ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்குப்பின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல். எஸ். சத்யமூர்த்தி முன் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேசை விசாரணைக்கு எடுக்க அனுமதிக்குமாறு போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது. அதேவேளை, அன்பில் மகேசுக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். நள்ளிரவு 12.30 மணிவரை இரு தரப்பும் வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அதன்படி, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வரும் 6ம் தேதி வரை (10 நாட்கள்) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *