• October 26, 2026

தென் மண்டல ஆக்கி போட்டி: தமிழக  ஜூனியர் பெண்கள்  அணி தேர்வு

 தென் மண்டல ஆக்கி போட்டி: தமிழக  ஜூனியர் பெண்கள்  அணி தேர்வு

தென்மண்டல அளவிலான சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டி காக்கிநாடாவில்  27ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது 

இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன இப் போட்டியில் கலந்து கொண்டு விளையாட தமிழக அணிக்கான  ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு  கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடந்தது.

 இந்த  தேர்வில் ஜூனியர் பிரிவில் 82 வீராங்கனைகள்  கலந்து கொண்டு விளையாடிர். ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன்,பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் தேர்வு குழு தலைவர்  குரு சித்திர சண்முக பாரதி  தேர்வு குழுவினர் முத்துக்குமார், அஸ்வின், சந்தியா, ராஜா, ஆகியோர் தேர்வு செய்த வீராங்கனைகளை அறிவித்தனர்

மேலும் இந்த தேர்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த யு. பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பரமசிவம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் புகழேந்தி, உடற்கல்வி இயக்குனர் பூபதி ஆகியோர் வீராங்கனைகளை வாழ்த்தினார்கள் 

தமிழ்நாடு ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி வீராங்கனைகள் வருமாறு :-

சுவாதி சர்மா, ஹரிதா, பாவனா, மஞ்சு, கனிஷ்கா, 

மகாலட்சுமி, கௌசல்யா, கிருத்திகா தேவி, இசை அரசி, 

நவ்யா, ராமலக்ஷ்மி, ராஜேஸ்வரி, தாமரைச்செல்வி, கனிமொழி, குரு பிரியா, நந்த தீபா, 

பிரியதர்ஷினி, அபிநயா,

அணியின் பயிற்சியாளர் சந்தியா மேலாளர் கார்த்திகை சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *