5 ஆயிரம் பேர் குவிந்தனர்: நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளுடன் நடிகர் தனுஷ் சந்திப்பு
Oplus_16908288
தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் நடிகர் தனுஷ் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், நற்பணி இயக்கமாக மாற்றப்பட்ட
அவரது ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக கோவை கவுண்டம் பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷின் ரசிகர் மன்றங்கள் தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில், சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், மாவட்ட நிர்வாகிகளை தனுஷ் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்
பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமான பெண்கள் தனியார் கல்லூரிக்கு வருகை தந்தனர்.
முன்னதாக மகளிரணி சந்திப்புக்கு வந்தவர்களுக்கு சிக்கன் பிரியாணி, முட்டை, பிரட் அல்வா என அசத்தல் விருந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து

நிகழ்ச்சிக்கு வந்த தனுஷ் நற்பணி இயக்க மகளிர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த பெண் நிர்வாகிகளுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் 5 நிமிடங்கள் மட்டுமே பேசிய தனுஷ், “உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி; தீபாவளி வாழ்த்துகள்” என தெரிவித்தார்.
தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளுடனான சந்திப்பில், நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டையில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் கூறுகையில்,”எங்களை நன்றாகப் படிக்கும்படி அறிவுறுத்தினார். அவரைச் சந்தித்ததில் எங்களுக்காக ஒரு பாடலும் பாடினார். அத்துடன், ‘வீட்டிற்குப் பத்திரமாகச் செல்லுங்கள்’ என்று கூறினார். அதன் பிறகு
வந்திருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.







