• October 25, 2026

கோவில்பட்டி  செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

 கோவில்பட்டி  செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

Oplus_16908288

​கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை  பூவனநாதசுவாமி கோவிலில், இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (25.10.2026) ஞாயிற்றுக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

​காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும், அதனைத் தொடர்ந்து 6 மணிக்குமேல் சிறப்பு ஹோமமும் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து, அம்பாள் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் ரேவதி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 7மணி முதல் 7:25 மணிக்குள் துலா லக்னத்தில்  கொடியேற்றம்  நடைபெற்றது.

​இதனைத் தொடர்ந்து நந்தி, கொடிமரம் மற்றும் பலிபீடத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. 

​இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பாளின் அருளைப் பெற்றனர்.

​இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

2 வது திருநாள் : 26.10.2026

காலை 8 மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா

இரவு 7.30 மணி -காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

3 வது திருநாள் : 27.10.2026 

காலை 8 மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா 

இரவு 7.30 மணி- சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

4 வது திருநாள் : 28.10.2026 

காலை 8 மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா 

இரவு 7.30 மணி- ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

5 வது திருநாள் : 29.10.2026 

காலை 8 மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா 

இரவு 7.30 மணி-காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

இரவு 8.மணி: சன்டிவி புகழ்.டாக்டர்.இராம.பூதத்தான்  தலைமையில் பட்டிமன்றம் 

6 வது திருநாள்: 30.10.2026 

காலை 8மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா

இரவு 7.30 மணி -அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

7 வது திருநாள்: 31.10.2026 

காலை 8. மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா 

இரவு 7.30 மணி -சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா

8 வது திருநாள்: 1.11.2026 

காலை 8. மணி- பல்லக்கில் அம்மன் திருவீதி உலா

 இரவு 7.30 மணி- சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா 

9 வது திருநாள் : 2.11.2026 திருத்தேரோட்டம் 

காலை 6. மணிக்கு மேல் 7 மணிக்குள் ரதாரோகணம் 

காலை 9.மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல்

 இரவு 7.30 மணி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா 

10 வது திருநாள்: 3.11.2026 

காலை 8 மணி- பல்லக்கில் அம்மன் திருவீதி உலா 

-இரவு 7.30 மணி

ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா 

11 வது திருநாள் : 4.11.2026 

பகல் 1 மணி தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளல்

மாலை 6 மணி- சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுத்தல்.

12 வது திருநாள்: 5.11.2026  திருக்கல்யாணம்

காலை 8.மணி -பல்லக்கில் அம்மன் திருவீதி உலா 

 இரவு 7.மணிக்கு மேல் 8.க்குள் ரிஷப லக்கனத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். பின்னர் சுவாமி யானை வாகனத்தில் அம்மன் பல்லக்கில் பட்டணப்பிரவேசம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *