• October 23, 2026

பைக் ரேஸ் நடத்திய 4 பேர் கைது 

 பைக் ரேஸ் நடத்திய 4 பேர் கைது 

 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே காமராஜர் சிலை பகுதியில், கடந்த 20.10.2026 அன்று பைக் ரேஸ் என்ற பெயரில் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் இருசக்கர வாகனங்களில் சென்ற 4 நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சாத்தான்குளம் ஞானியார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களான செல்வராஜ் மகன் தமிழரசன் (22), மோகன் மகன் முத்து (19), நடராஜன் மகன் கோகுலகண்ணன் (21) மற்றும் பட்டுராஜ் மகன் தனுஷ் சூர்யா (22) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய  பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி தூத்துக்குடி காவல்துறை விடுத்துள்ள செய்தியில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், பைக் ரேஸ், பைக் வீலிங் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *