• October 22, 2026

கோவில்பட்டி ஒன்றியத்துடன் 12 ஊராட்சிகள் இணைப்பு : கிராம மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

 கோவில்பட்டி ஒன்றியத்துடன் 12 ஊராட்சிகள் இணைப்பு : கிராம மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம் குருவி குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த 12 ஊராட்சி கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவுடன் 1.5.2008-ல் இணைக்கப்பட்டது. 

மற்ற துறைகள் இணைக்கப்பட்ட நிலையில் ஊரக உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த இளையரசனேந்தல் பிர்காவில் அடங்கிய அப்பனேரி, அய்யனேரி உள்பட12 ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்காமல் இருந்தன. 

 இதனால் 12 ஊராட்சிகள் மட்டும் தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்று இருந்தது. 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஒன்றியத்தில் இணைக்க தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 12 கிராம ஊராட்சிகளை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு மாற்றம் செய்து சில மாதங்களுக்கு முன்பு ஆணை வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட மாவட்டங் களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 19-ம் தேதியுடன் நிறைவுற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் இருந்து தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

நியமன அலுவலர்கள் பொறுப்பேற்று 12 ஊராட்சி களும் முழுமையாக கோவில்பட்டி ஊராட்சி

ஒன்றியத்துடன் இணைந்ததை வரவேற்று இளையரசனேந்தலில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்புக்குழு தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு முன்னிலை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

வழக்கறிஞர் அய்யலுசாமி, அப்பனேரி வி. கற்பூரராஜ், வெங்கடேஸ்வரா கார்டன் கோபால கிருஷ்ணன்,பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரக்கண்ணன், கோவில் பட்டி ரோட்டரி சங்க நிர்வாகி ராஜமாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி கூறும்போது, ’18 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. 12 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். எங்களது அடுத்த இலக்கு கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்குவது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளார். அதன் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசை வலியுறுத்துவோம்’ என்று குறிப்பிட்டார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *