மாநில சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணிகள் தேர்வு; கோவில்பட்டியில் நாளை நடக்கிறது
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன், பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
ஆந்திர பிரதேசம் மாநிலம் காக்கிநாடாவில் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை தென் மண்டல சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பெண்கள் ஆக்கி லீக் போட்டி நடைபெற உள்ளது
இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா கேரளா, புதுச்சேரி மாநில அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளன.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நாளை 22.10.2026 காலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆக்கி வீராங்கனைகள் சப் ஜூனியர் பிரிவில் 1.1.2010க்கு பின் பிறந்தவராகவும் ஜூனியர் பிரிவில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் 1.1..2007 க்கு பின் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். தேர்வில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் ஆதார் நகல், பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9443190781 தொடர்பு கொள்ளவும் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் மோகன் அருமை நாயகம் , குரு சித்ர சண்முக பாரதி, காளிமுத்து பாண்டியராஜா ஆகியோர் செய்துஉள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







