கம்மவார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; கம்மநாயுடு மகாஜன சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
Oplus_16908288

தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஐன சங்கத்தின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியை அடுத்த திருவேங்கடம் அர்ச்சனா மினி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவேங்கடம் மண்டல தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் ( தெற்கு) சின்னச்சாமி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தேனி , ராஜபாளையம் , சிவகாசி , சாத்தூர் , கோவில்பட்டி , திருவேங்கடம் , சங்கரன்கோவில் , கழுகுமலை , தூத்துக்குடி , எட்டையாபுரம் , விளாத்திகுளம் , மதுரை, விருதுநகர் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

*வடுகர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் கம்மவார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும்.
*தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மையினர் என சான்று தடையில்லாமல் (இணையதளம் மூலம்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்பட்டி, சங்கரன்கோவில், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் , தேனி வீரபாண்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோவில்களில் நிரப்பப்படவுள்ள அறங்காவலர் குழுக்களில் கம்ம நாயுடு சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குமாறு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
*உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு கோவில்பட்டியில் முழு உருவ வெண்கல சிலை அமைக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

*தேனியில் தியாகசீலர் என்.ஆர் தியாகராஜனுக்கு சிலை வைக்குமாறு அமைக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.







