அகில இந்திய ஆக்கி: வெண்கல பதக்கம் வென்ற கோவில்பட்டி பள்ளி வீரர்களுக்கு வரவேற்பு
Oplus_16908288
கோவில்பட்டியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று ராகுல் பாண்டியன் தலைமையிலான கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி அணி தேசிய போட்டிக்கு தகுதி பெற்றது.
இதை தொடர்ந்து அரியானாவில் ஒரு வாரம் நடைபெற்ற அகில இந்திய CBSE பள்ளிகளுக்கு இடையிலான தேசிய ஆக்கி போட்டியில் முதல் முறையாக பங்கேற்றனர்.

போட்டியில் சிறப்பாக ஆடி மூன்றாவது இடம் பிடித்தனர். இதனால் அவர்களுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இதற்காக பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.
பின்னர் அரியானாவில் இருந்து பரிசு கோப்பையுடன் அணி வீரர்கள் கோவில்பட்டி திரும்பினார்கள்.
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து, முதல்வர் ஜன்னத் நிஷா ஹுசைன், மூத்த துணை முதல்வர் சுதாகர், ஆசிரியர்கள் கிருஷ்ணா ராவ் பார்த்திபன் உடற்கல்வி ஆசிரியர் வீரா, ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோர் வீரர்களுக்கு மலர்மாலை சூட்டி வரவேற்றனர். பயிற்சியாளர் சுரேந்தர்,அணி மேலாளர் மாரியப்பன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.







