20 ஆண்டுகளாக சேதமடைந்த சாலையை சீரமைக்காத அரசினை கண்டித்தும், சீரமைக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் கருப்பு கொடி ஏற்றி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் மந்திதோப்பு சாலையும் ஒன்று பல்வேறு கிராமங்களை கோவில்பட்டி நகருடன் இணைக்கக்கூடிய முக்கியமான சாலை. இந்த சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைவது மட்டுமின்றி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது […]
கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, தனக்கு […]
தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். இதற்கிடையே டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இதையொட்டி செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு […]
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்… இல்லையெனில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்; எடப்பாடி
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்தபின் ரூ. 75,000/-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்கு மேல் […]
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்து பேசுவதற்காக தமிழக முதல் அமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த கர்நாடக பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினையை அணுகுவது சரியான முடிவாக இருக்காது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த […]
திமுக முன்னாள் அமைச்சர் பல்வேறு வழக்குகளை சந்தித்து வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. த.வெ.க. அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, செந்தில்பாலாஜி மீது […]
சென்னையில் உருவாகும் சர்வதேச பல்கலைக்கழகம் ; முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னையில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,:-தமிழ்நாடு முதல்வர் விஜய் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக முன்னணி உலகளாவிய […]
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc & A.H.) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (B.Tech உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு) தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியlலை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ. கமலி வெளியிட்டார். தரவரிசைப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் (B.V.Sc & A.H. மற்றும் B.Tech) […]
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு முந்தைய காலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் நெய் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அப்போது தரம் குறைந்த நெய் வழங்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து கேரளம் அரசின் பால்வள மேம்பாட்டு நிறுவனமான மில்மா நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்க முடிவு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் கடந்த சீசனில் மில்மாவின் பத்தனம்திட்டா உற்பத்தி மையத்தில் இருந்து 1 லட்சத்து 77 .ஆயிரத்து 66 லிட்டர் நெய் சபரிமலைக்கு வினியோகம் செய்யப்பட்டது…. ஆனாலும் கலப்படம் நிறைந்த தரம் […]
தூத்துக்குடிக்கு போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க வேண்டும்; அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-;- தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பெரிய ரக விமானங்களை இயக்க வலியுறுத்தி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏராளமான தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். உப்பு உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு போன்ற பாரம்பரிய தொழில்களுடன் அனல் மின் நிலையங்கள், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, கனநீர் தயாரிப்பு, சிர்கோனியம், DCW கெமிக்கல் ஆலை ஆகிய கனரக இயந்திர தொழிற்சாலைகள் […]







